Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அசிடிட்டி, நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம் குணமாக!! வராமல் இருக்க இதை செய்யுங்கள்!!

#image_title

அசிடிட்டி, நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம் குணமாக!! வராமல் இருக்க இதை செய்யுங்கள்!!

அசிடிட்டி, நெஞ்செரிச்சல், புளிச்ச ஏப்பம், உணவு சாப்பிட்டதும் வரக்கூடிய அசைவுகளையும் இதெல்லாம் ஏன் வருகிறது என்று அதைப் பற்றி பார்க்கலாம். அசிடிட்டி என்பது ஒரு சாதாரண பிரச்சனையாக பலர் பார்க்கிறார்கள் ஆனால் அசிடிட்டி உடலில் ஏற்படுவதன் மூலம் பல விதமான பாதிப்புகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த நோய் வருவதற்கான காரணம் துரித உணவுகளை அதிகம் உட்கொள்வதன் மூலம் உண்டாகிறது. நூடுல்ஸ், பர்கர், சிக்கன் ரைஸ், பரோட்டா, பானி பூரி போன்ற உணவுகளை தொடர்ந்து உட்கொள்வது மூலமாக ஏற்படுகிறது. இவ்வாறு சாப்பிடுவதினால் உடலில் உள்ள அமிலத்தன்மை அதிகரிக்கும் அல்லது மிகவும் குறைக்கும் இதன் மூலமாக இந்த பிரச்சனை உருவாகிறது.

ஒரு உணவு வேக அறை முதல் முக்கால் மணி நேரம் ஆகும் ஆனால் நாம் உட்கொள்ளக்கூடிய ஃபாஸ்ட் ஃபுட் வகைகள் ஐந்து நிமிடங்களில் சமைத்து முடிக்கிறோம். இதனை உட்கொள்ளும் பொழுது வயிற்றில் உள்ள ஜீரண சுரப்பிகள் சரியாக வேலை செய்யாமல் போகும். இதனால் செரிமானம் சீராக நடக்காது. இவ்வாறு தொடர்ந்து நடக்கையில் வயிறு சம்பந்தமான பல பிரச்சனைகள் உண்டாகும் அதனுடன் அசிடியும் உருவாகும். இன்றைய காலகட்டத்தில் பலர் வேகமாக சமைத்து வேகமாக சாப்பிட்டு வருவது ஒரு காரணமாக அமைகிறது.

உணவை நன்கு மென்னு சாப்பிடுவதன் மூலமாக இதனை தவிர்க்கலாம். அதுமட்டுமல்லாமல் சாப்பிடும் உணவை சரியான நேரத்தில் உட்கொள்வது அவசியம். காலை, மதியம், இரவு என மூன்று வேலையும் சரியான நேரத்தில் இடைவெளி விட்டு சாப்பிடுவதால் ஜீரணம் சரியாக நடக்கும். இப்ப ஒரு சாப்பிட்டு வரையில் பசி சரியான நேரங்களில் எடுக்கும்.

முதலாவதாக அசிடிட்டி சரி செய்ய 30 உலர் திராட்சையை எடுத்து இரவில் ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைக்கவும். காலை எழுந்தவுடன் ஊறவைத்த உலர் திராட்சை மற்றும் தண்ணீரை பருகி வருகையில் இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

இரண்டாவதாக குடிக்கும் பால் அல்லது தண்ணீரில் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வருகையில் அசிடிட்டி தொல்லையில் இருந்து விடுபடலாம். பனங்கற்கண்டுக்கு அசிடியை போக்கக்கூடிய தன்மை இயற்கையாகவே உள்ளது.

மூன்றாவதாக குடிக்கக்கூடிய தண்ணீரில் சீரகத்தை போட்டு கொதிக்க வைத்து பின்னர் அதனை ஆற வைத்து குடித்து வருகையில் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

நான்காவதாக வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு தண்ணீரில் இஞ்சி மற்றும் துளசி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வருகையில் தொல்லையில் இருந்து விடுபடலாம் அசிடிட்டி தொல்லையில் இருந்து விடுபடலாம்.

ஐந்தாவதாக வாழைப்பழம் தினமும் சாப்பிடுவதன் மூலமாகவும் இந்த பிரச்சனை குணமாகும். புதினா இலைகளை நம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாகவும் சரி செய்யலாம்.

 

 

 

 

 

 

 

 

 

 

Exit mobile version