மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக உதிரப்போக்கு குணமாக.. இதனை 1 முறை சாப்பிடுங்கள்!!

0
197
Cure excessive shedding during menstruation.. Eat this 1 time!!

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக உதிரப்போக்கு குணமாக.. இதனை 1 முறை சாப்பிடுங்கள்!!

வயது வந்த பெண்கள் சந்திக்க கூடிய பாதிப்புகளில் ஒன்று உதிரப்போக்கு.இவை மாதவிடாய் காலங்களில் ஏற்பட்டு உடல் சோர்வை உண்டாக்கும்.இதனால் உடல் சோர்வு,உடலில் சத்து குறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

எனவே அதிகளவு உதிரப்போக்கு ஏற்படுதல் பிரச்சனை குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)பெருங்காயம் – 100 கிராம்

2)சர்க்கரை – 50 கிராம்

3)மிளகு – 10 கிராம்

4)பூண்டு பற்கள் – 10 கிராம்

5)அதிமதுரம் – 10 கிராம்

6)சீரகம் – 10 கிராம்

7)சுக்கு – 10 கிராம்

8)ஓமம் – 10 கிராம்

9)திப்பிலி – 10 கிராம்

10)நாட்டு பசுநெய் – தேவையான அளவு

செய்முறை:-

அடுப்பில் ஒரு கடாய் வைத்து 10 கிராம் கரு மிளகு,10 கிராம் தோல் நீக்கிய பூண்டு,10 கிராம் சுக்கு,10 கிராம் ஓமம்,10 கிராம் திப்பிலி,10 கிராம் ஓமம்,10 கிராம் பெருங்காயம்,10 கிராம் அதிமதுரம் சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.பிறகு இதை நன்கு ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு நைஸ் பவுடராக்கி கொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 250 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 50 கிராம் சேர்த்து பாகு பதத்திற்கு காய்ச்சவும்.பின்னர் அரைத்த அரைத்த பொடியை சேர்த்து நன்கு கிளறவும்.

லேகியம் பதத்திற்கு கிண்டவும்.2 அல்லது 3 நிமிடங்களுக்கு கிளறி அடுப்பை அணைக்கவும்.பின்னர் அதில் சிறிது நாட்டு பசு நெய் சேர்த்து ஒருமுறை கிளறி அடுப்பை அணைக்கவும்.

பிறகு இந்த லேகியத்தை ஆறவிட்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஈரமில்லாத டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:-

மாதவிடாய் காலங்களில் அதிகளவு உதிரப்போக்கு பாதிப்பு சந்திக்கும் பெண்கள் இந்த லேகியத்தை தினமும் ஒரு உருண்டை சாப்பிட்டு வந்தால் அவற்றிற்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.

அதேபோல் லேகியம் தயாரிக்க அரைத்த பவுடரை தண்ணீர் அல்லது பாலில் போட்டு காய்ச்சி குடித்து வந்தாலும் அதிக உதிரப்போக்கு பாதிப்பு குணமாகும்.