Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பூச்சி வெட்டு மற்றும் புழுவெட்டு குணமாக!! இதை செய்யுங்கள் கட்டாயம் முடி அடர்த்தியாக வளரும்!!

#image_title

பூச்சி வெட்டு மற்றும் புழுவெட்டு குணமாக!! இதை செய்யுங்கள் கட்டாயம் முடி அடர்த்தியாக வளரும்!!

பூச்சி வெட்டு அல்லது புழுவெட்டு என்பது நமது முடியில் ஏற்படும் ஒரு பாதிப்பாகும், நமது தலைமுடியில் குறிப்பிட்ட அளவு முடியானது திடீரென உதிர்ந்துபோகும், உதிர்ந்த அந்த இடத்தில் புது முடிகள் வளராது. அதையே நாம் பூச்சி வெட்டு இதனை சரி செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்.

இந்த பாதிப்பு வருவதற்கான காரணம் ரத்தம் சுத்தமாக இல்லாததும் ஒன்று. ரத்தம் சுத்தமாக இல்லாததற்கு நம் சாப்பிடும் உணவு காரணம். அதிகப்படியான கெமிக்கல் ப்ராடக்ட்ஸை சாப்பிடுவதன் மூலமாக ரத்தம் சுத்தம் இல்லாத தன்மையை பெறும்.(எடுத்துக்காட்டாக: அடிக்கடி மிஞ்சிய பழைய குழம்புகளை குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்து அதனை சூடு படுத்தி மீண்டும் உண்பதன் மூலம் இவ்வாறு நடக்கலாம்).

இதனால் முதலில் ரத்தத்தை சுத்தம் செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம். ரத்தத்தை சுத்தம் செய்வதற்கு திரிபலா நல்ல தீர்வை கொடுக்கும். 48-60 நாட்களுக்கு தொடர்ந்து திரிபலாவை சாப்பிட்டு வருவதால் ரத்தம் முழுமையாக சுத்தம் அடையும். இதனை இரவு சாப்பிட்டு தூங்குவதற்கு முன் கால் அல்லது அரை ஸ்பூன் அளவிற்கு வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்து வர வேண்டும். இதனை செய்த பின்னர் பூச்சி வெட்டு மற்றும் புழுவெட்டு போவதற்கு என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. புங்க எண்ணெய்-100ml
2. புன்னை எண்ணெய்-100ml
3. வேப்ப எண்ணெய்-100ml
4. ஆடு தீண்டாப்பாளை இலை

செய்முறை:

ஆடு தீண்டாப்பாலை இலை சாரு பிழிந்து இதனுடன் புங்க எண்ணெய், புன்னை எண்ணெய், வேப்ப எண்ணெய் சேர்த்து மிதமான சூட்டில் இதனை சூடு செய்ய வேண்டும். இதில் உள்ள நுரை அடங்கும் வரை சூடு செய்யவும். இதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் சேகரித்துக் கொள்ளவும்.
இந்த எண்ணெயை இரவு தூங்கும் முன் எந்த இடங்களில் பாதிப்பு உள்ளதோ அதன் மீது தடவிக் கொண்டு தூங்கவும். அடுத்த நாள் காலையில் எழுந்து தலைக்கு குளித்துக் கொள்ளுங்கள். இவ்வாறு ஒரு வாரம் தொடர்ந்து செய்து வருகையில் அங்குள்ள கிருமிகள் அழிந்து முடி வளரத் தொடங்கும். இவ்வாறு இதனை பயன்படுத்தி நன்மையை பெற்று மகிழுங்கள்.

 

Exit mobile version