நரம்பு வலி அடைப்பு குணமாக.. ஒரு மாதம் மட்டும் இந்த டீ போட்டு குடியுங்கள்!!
உங்களில் பலர் நரம்பு சார்ந்த பாதிப்புகளை சந்தித்து வருவீர்கள்.நம் உடலில் மூளை உள்ளிட்ட அனைத்து உறுப்புகளையும் இணைக்கும் பலமாக நரம்பு உள்ளது.நம் உடலில் நரம்புகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உள்ளது.நரம்புகளில் இரத்த ஓட்டம் பாதிப்படையும் பொழுது அவை வலி,அடைப்பு உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும்.
எனவே உடல் நரம்புகளை வலிமையாக வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தவறாமல் பின்பற்றி வரவும்.
தேவையான பொருட்கள்:-
1)ஆப்பிள்
2)இஞ்சி
3)பூண்டு பல்
4)கிராம்பு
5)எலுமிச்சை சாறு
6)தண்ணீர்
செய்முறை:-
முதலில் ஒரு ஆப்பிளை தோல் தண்ணீர் சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.பிறகு இரண்டு பல் பூண்டை தோல் நீக்கி கொள்ளவும்.அதேபோல் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதனுள் நறுக்கிய ஆப்பிள் துண்டுகள்,பூண்டு பல்,இஞ்சி துண்டு,இரண்டு கிராம்பு சேர்க்கவும்.பின்னர் பாதி எலுமிச்சம் பழத்தின் சாற்றை அதில் பிழிந்து கொள்ளவும்.
பிறகு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.ஜூஸ் பதத்திற்கு அரைத்த பின்னர் இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் நரம்பு வீக்கம்,நரம்பு தளர்ச்சி உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)சீரகம்
2)கருஞ்சீரகம்
3)பூண்டு
4)ஓமம்
5)சதை குப்பை
6)தண்ணீர்
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 10 கிராம் சீரகம்,10 கிராம் கருஞ்சீரகம்,10 கிராம் ஓமம்,10 கிராம் பூண்டு மற்றும் 10 கிராம் சதை குப்பை சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடிக்கவும்.இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால் நரம்பு வலி,நரம்பு அடைப்பு உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.