அதிகப்படியான சளியால் சுவாசப் பிரச்சனை,தொண்டை கரகரப்பு,மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற பாதிப்புகளை அனுபவிக்க நேரிடுகிறது.இந்த சளி தொந்தரவு,இருமல் பிரச்சனையில் இருந்து மீள சில மூலிகை பொருட்களை அரைத்து அதில் டீ போட்டு குடிங்க!!
தேவையான பொருட்கள்:-
**சித்தரத்தை – 10ம் கிராம்
**சுக்கு பீஸ் – ஒன்று
**வெட்டி வேர் – 5 கிராம்
**டீ தூள் – கால் தேக்கரண்டி
**ஏலக்காய் – ஒன்று
**வர கொத்தமல்லி விதை – ஒரு தேக்கரண்டி
**சீரகம் – கால் தேக்கரண்டி
**திப்பிலி – 10 கிராம்
**ஓமம் – கால் தேக்கரண்டி
**கருப்பு மிளகு – ஐந்து
**தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
1)முதலில் சித்தரத்தை,திப்பிலி உள்ளிட்ட பொருட்கள் அனைத்தையும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
2)பிறகு அனைத்தையும் தனி தனியாக வறுத்துக் கொள்ள வேண்டும்.அதற்கு முதலில் அடுப்பில் வாணலி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு முதலில் சீரகத்தை கொட்டி வறுத்து ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
3)அதன் பிறகு ஓமம்,கருப்பு மிளகு,சுக்கு,சித்தரத்தை,திப்பிலி,வர கொத்தமல்லி உள்ளிட்ட பொருட்களை போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.
4)பிறகு இவற்றை நன்றாக ஆறவைத்து ஒரு மிக்சர் ஜாரில் போட வேண்டும்.அதன் பிறகு வெட்டி வேர்,ஏலக்காய் சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
5)இந்த பவுடரை ஒரு சிறிய டப்பாவில் கொட்டி சேகரித்து வைத்து இரண்டு நாட்களுக்கு பயன்படுத்தலாம்.
6)இப்பொழுது அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.அடுத்து அதில் கால் தேக்கரண்டி டீ தூள் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
7)பிறகு அரைத்த பொடி அரை தேக்கரண்டி அளவு சேர்த்து குறைவான தீயில் கொதிக்க வைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.
8)பிறகு இந்த பானத்தில் தேவையான அளவு தேன் சேர்த்து பருகினால் சளி,வறட்டு இருமல்,தொண்டை கரகரப்பு பிரச்சனை மூன்று தினங்களில் சரியாகும்.சளி பிரச்சனை இருப்பவர்கள் சூடான நீரை பருகலாம்.மூலிகை கஷாயம் செய்து குடித்து வந்தால் சளி பாதிப்பில் இருந்து மீண்டுவிடலாம்.