Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இரண்டே நாளில் அக்கி புண்கள் குணமாக.. நம் பவர்புல் பாட்டி வைத்தியத்தை பின்பற்றுங்கள்!!

வேனல் கட்டி அதாவது அக்கி புண்கள் வந்தால் கடுமையான தொந்தரவுகளை நாம் சந்திக்க நேரிடும்.அக்கி புண்களில் அரிப்பு ஏற்படும் பொழுது அங்கு சொறிந்தால் அதில் உள்ள திரவம் மற்ற இடங்களுக்கு பரவி நோயின் தாக்கத்தை அதிகரித்துவிடும்.

பொதுவாக இந்த நோய் பாதிப்பு கோடை காலங்களில் தான் அதிகளவு காணப்படும்.அக்கி பாதிப்பு ஏற்பட்டால் கத்தரிக்காய்,இறைச்சி,கருவாடு,கருணைக்கிழங்கு போன்ற பொருட்களை தவிர்ப்பது நல்லது.இந்த பொருட்களை உணவாக எடுத்துக் கொண்டால் அக்கி உண்டான பகுதியில் அரிப்பு மற்றும் பிப்பு ஏற்படத் தொடங்கிவிடும்.இந்த அக்கி புண் சிறியவர்கள்,பெரியவர்கள் என்று யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.

அக்கி வருவதற்கான காரணங்கள்:-

1)வயது முதுமை
2)சின்னம்மை நோய் தாக்கம்
3)பாக்டீரியா தொற்று
4)வெப்பத் தாக்கம்
5)உடலில் அதிக அழுக்கு சேர்தல்

அக்கி அறிகுறிகள்:-

1)முக வீக்கம்
2)அரிப்பு

அக்கியை குணப்படுத்தும் மூன்று வீட்டு வைத்தியங்கள்:

தேவையான பொருட்கள்:-

1)ஊமத்தை இலை – ஒரு கைப்பிடி
2)நல்லெண்ணய் – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கைப்பிடி ஊமத்தை இலையை தண்ணீர் விட்டு பசை போல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து இதில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து அக்கி புண்கள் மீது பூச வேண்டும்.இவை நன்றாக காய்ந்து வந்ததும் வெது வெதுப்பான தண்ணீர் கொண்டு அவ்விடத்தை ஒத்திஎடுத்துவிட்டு பிறகு மீண்டும் இந்த ஊமத்தை இலை பேஸ்டை அப்ளை செய்ய வேண்டும்.

தேவையான பொருட்கள்:-

1)வேப்பிலை – சிறிதளவு
2)மஞ்சள் – கால் தேக்கரண்டி
3)வெண்ணெய் – கால் தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

வேப்பிலை மற்றும் மஞ்சளை பேஸ்ட் பதத்திற்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு கால் தேக்கரண்டி வெண்ணெயை அதில் சேர்த்து அக்கி புண்கள் மீது பூச வேண்டும்.

பிறகு இவை காய்ந்து வந்ததும் வெது வெதுப்பான தண்ணீர் கொண்டு அவ்விடத்தை துடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு மீண்டும் இந்த வேப்பிலை பேஸ்டை அப்ளை செய்ய வேண்டும்.

தேவையான பொருட்கள்:-

1)செம்மண் – இரண்டு தேக்கரண்டி
2)தண்ணீர் – தேவையான அளவு

செம்மண்ணை சலித்து ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குழைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பேஸ்டை அக்கி புண்கள் மீது அப்ளை செய்து வந்தால் அவை சீக்கிரமாக குணமாகிவிடும்.

Exit mobile version