பேய்மிரட்டி சூரணம்: ஜுரம் வறட்டு இருமலை போக்கும்.. வயிற்றுப்போக்கை நிறுத்தும்!! உடனே ட்ரை பண்ணுங்கள்!!

0
137
Cures fever and dry cough.. Stops diarrhoea!! Try it now!!

பேய்மிரட்டி சூரணம்: ஜுரம் வறட்டு இருமலை போக்கும்.. வயிற்றுப்போக்கை நிறுத்தும்!! உடனே ட்ரை பண்ணுங்கள்!!

முற்காலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேய் பிடித்திருக்கிறது என்று கூறி பெருந்துளசி என்ற செடியை வைத்து அவர்களை அடித்தனர்.இதனால் அந்த செடி காலப்போக்கில் பேய்மிரட்டி செடி என்று பெயர் மாறியது.

பேய்மிரட்டி செடியில் உள்ள இலை,பூ,தண்டு,வேர் அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவையாக உள்ளது.பேய்மிரட்டியில் உள்ள தாதுக்கள் செரிமானக் கோளாறை சரி செய்ய உதவுகிறது.

பேய்மிரட்டி சூரணம் தயாரிப்பது எப்படி?

இந்த செடியின் இலை,தண்டு,பூ மற்றும் வேரை நன்கு உலர்த்தி பொடியாக்கினால் பேய்மிரட்டி சூரணம் தயாராகி விடும்.

பயன்படுத்தும் முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் பேய்மிரட்டி சூர்ணம் ஒரு தேக்கரண்டி சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த சூரணத்தை தினமும் குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

பேய்மிரட்டி மருத்துவ பயன்கள்:-

1)பேய்மிரட்டி சூரணத்தை அருந்தி வந்தால் கடுமையான தலைவலி குணமாகும்.இந்த பானம் உடலில் உள்ள நச்சுக் காற்றை வெளியேற்ற உதவுகிறது.

2)அடிக்கடி உடல் சோர்வு பிரச்சனையை சந்திப்பவர்கள் ஒரு கிளாஸ் பேய்மிரட்டி சூரணம் செய்து அருந்தி வரலாம்.

3)வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் பேய்மிரட்டி இலையை நீரில் கொதிக்க விட்டு குடிக்க வேண்டும்.

4)பேய்மிரட்டி இலையை கொத்திக்க விட்டு ஆவி பிடித்தால் சளி,இருமல்.ஜலதோஷம் குணமாகும்.

5)பேய்மிரட்டி இலையை திரி போல் விளக்கில் வைத்து எண்ணெய் ஊற்றி பற்ற வைத்தால் அதன் புகை வாடைக்கு வீட்டில் உள்ள கொசுக்கள் வெளியேறி விடும்.

6)பேய்மிரட்டி சாறை 150 மில்லி நீரில் கொதிக்க வைத்து குடித்தால் அம்மை நோய் குணமாகும்.

7)பேய்மிரட்டி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் வாதம் குணமாகும்.