Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்று முதல்  இரவு ஊரடங்கு அமல்! அரசின் அதிரடி உத்தரவு!

Curfew effective from tonight! Government Order of Action!

Curfew effective from tonight! Government Order of Action!

இன்று முதல்  இரவு ஊரடங்கு அமல்! அரசின் அதிரடி உத்தரவு!

கொரோனா தொற்றானது  கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை உலுக்கி வருகிறது. மக்களும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நடைமுறை வாழ்க்கையை திரும்ப கொண்டுவர பெரிதும் பாடுபட்டு வருகின்றனர். நடைமுறை வாழ்க்கை வாழ ஆரம்பிக்கும் பொழுது மீண்டும் பாதிப்பு அதிகரித்து ஊரடங்கிற்கு தள்ளப்பட்டு விடுகின்றனர்.அந்த வகையில் மக்கள் அனைவரும் 1,2 என கடந்து தற்பொழுது மூன்றாவது அலையை நோக்கி அடி எடுத்து வைத்துள்ளனர்.இந்த இரண்டு அலைகளிலும் மக்கள் அதிகளவு உயிர் சேதங்களை சந்தித்துவிட்டனர்.

தற்பொழுது தான் அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.அந்த வகையில் மக்கள் அனைவரும் தற்பொழுது தான்  விழிப்புணர்வுடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வந்துள்ளனர். இருப்பினும் நாளுக்கு நாள் அவற்றின் பாதிப்பு அதிகரித்து கொண்டே தான் வருகிறது. தற்பொழுது பண்டிகை காலம் நெருங்கி வருவதால் தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன. அந்தவகையில் ஒடிசா மாநிலத்தில் இன்று முதல் 10 நாட்களுக்கு இரவு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.

ஏனென்றால் அம்மாநிலத்தில் தொற்றின் பாதிப்பானது தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், இப்பொழுது பண்டிகை காலம் என்பதால் மக்கள் அதிகளவு கூடுவதை தவிர்க்கவும் அம்மாநில அரசு இரவு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கும் காணப்படும் என கூறியுள்ளனர்.மேலும் பட்டாசுகளை விற்கவும் வெடிப்பதற்கும் ஒடிசா அரசு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த தடையினால் பொதுமக்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும் என்றும் மேற்கொண்டு தொற்று பரவாமல் தடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.இதேபோல டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version