தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது – மேலும் சில தளர்வுகள் அறிவிப்பு!

0
158

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் பரவியதால் முழு ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டு வந்தது. அதன் பிறகு செப்டம்பர் மாதம் முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன.

தற்போது நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரையிலும் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்துடன் மேலும் சில தளர்வுகளையும் அறிவித்து இருக்கிறது. அது என்னவென்றால் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் அனைத்தும் 16ஆம் தேதியன்று திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று முழுமையாக இல்லாத இடத்திற்கு மட்டும் இது பொருந்தும் என்றும் அறிவித்துள்ளது.  கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் அனைத்து கட்சி கூட்டங்களும் கட்டுப்பாடுகளை பின்பற்றி நடத்தலாம் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார்.

சின்னத்திரை மற்றும் திரைப்படங்கள் சூட்டிங் எடுக்கும் வேலைகளில் தேவையான தொழிலாளர்களை மட்டும் பயன்படுத்தவும், வேடிக்கை பார்க்க கூட்டம் கூடாத வண்ணம் பார்த்துக் கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது தமிழக அரசு.