Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தனியார் அலுவலகங்களுக்கு ஊரடங்கு! அரசின் அதிரடி நடவடிக்கை!

Curfew for private offices! Government action!

Curfew for private offices! Government action!

தனியார் அலுவலகங்களுக்கு ஊரடங்கு! அரசின் அதிரடி நடவடிக்கை!

தொற்றானது ஓர் ஆண்டுக்கு ஒருமுறை பரிமாற்றம் அடைந்து தொடர்ந்து பரவி வருகிறது. இந்த நிலையில் மக்கள் தங்களின் பாதுகாப்பிற்காக ஒருபுறம் தடுப்பூசியும் செலுத்தி வருகின்றனர். இருப்பினும் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது. மத்திய அரசும் முழு ஊரடங்கு போடுவதை தடுக்க அனைத்து மாநில அரசுகளும் அந்தந்த மாநிலங்களின் தொற்று உயர்வை அறிந்து கட்டுப்பாடுகளை அமல் படுத்திக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டது. அந்த வகையில் ஒவ்வொரு மாநில அரசும் தொற்று பாதிப்பு ஏற்ப கட்டுப்பாடுகளை அமுல்படுத்தி வருகின்றனர்.

நமது தமிழகத்தில் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு அமல் படுத்தி உள்ளனர். அதேபோல தினந்தோறும் இரவு ஊரடங்கு அமல் படுத்தி உள்ளனர். டெல்லியில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் டெல்லி மாநிலத்தில் தொடர்ந்து தொற்று பாதிப்பு குறைந்தபாடில்லை. அதனால் தொற்று பரவலை தடுக்க தனியார் அலுவலகங்கள் அனைத்திற்கும் வீட்டிலிருந்து பணியாற்றும்படி உத்தரவிட்டுள்ளனர். இந்த கட்டுப்பாட்டை டெல்லி பேரிடர் மேலாண்மை அமைப்பு கூறியுள்ளது.

டெல்லியில் ஒரு நாளில் 19 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்ற முறை அதிக அளவு பாதிப்பு ஏற்பட்ட மாநிலங்களில் டெல்லி தான் முதலிடத்தில் இருந்தது. இம்முறை அதனை தவிர்க்க டெல்லி அரசு முன்கூட்டியே பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. இந்த தனியார் அலுவலகங்களில் அத்தியாவசிய தேவைக்காக செயல்படும் நிறுவனங்கள் மட்டும் இயங்கலாம் என்றும் கூறியுள்ளனர். அத்தியாவசிய தேவைகளில் தவிர்த்த மற்ற நிறுவனங்கள் அனைத்தும் வீட்டில் இருந்து வேலை செய்யும் படி உத்தரவிட்டுள்ளனர். அதேபோல உணவகங்கள் மறு உத்தரவு வரும் வரை மூடி இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். உணவகங்களில் வாடிக்கையாளர்கள் உட்கார்ந்து சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version