Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த 10 மாவட்டங்களில் ஊரடங்கு! அரசின் திடீர் உத்தரவு!

Render Corona! Lockdown again!

Render Corona! Lockdown again!

இந்த 10 மாவட்டங்களில் ஊரடங்கு! அரசின் திடீர் உத்தரவு!

அடுத்ததாக நமது இந்தியாவிலும் ஊரடங்கு கொரோனா தொற்றானது போன ஆண்டு சீனாவில் தொடரப்பட்டு படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் சென்றது. இந்த கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.மக்கள் வேலைவாய்ப்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இந்த ஊரடங்கானது ஏழு மாதங்களாக தொடர்ந்தது.

நவம்பர் மாதம் முதல் ஊரடங்கு சில தளர்வுகளுடன் முடிவுக்கு வந்தது.அதன்பின் மக்கள் கொரோனா தொற்றை மறந்து தனது பழைய வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிட்டனர்.மீண்டும் முதலில் ஆரம்பித்து போலவே ஐரோப்பியாவில் கொரோனா 2 வது அலை உருவாக ஆரம்பித்துவிட்டது.அதனைத்தொடர்ந்து சென்ற வருடம் நடந்தது போலவே வெளிநாடுகளில் அதாவது (ஜெர்மனி,பிரான்ஸ்) போன்ற நாடுகளில் ஊரடங்கானது  அமல்படுத்தப்பட்டுள்ளது.

அமல்படுத்தப்படும் எனக் கூறி வருகின்றனர்.அந்தவகையில் மகராஷ்டிராவில் முதலில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.அதனையடுத்து ஓடிசாவில் அதிக அளவு கொரோனா தொற்று பரவி வருவதால் குறிப்பிட்ட பத்து மாவட்டங்களில் மட்டும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி உள்ளனர்.இந்தியாவில் கொரோனாவின் 2 வது அலை உருவாகி வருகிறது.அதிலும் முக்கியமாக இந்தியாவில் மகராஷ்டிரம்,தமிழ்நாடு,கேரளா,ஒடிசா போன்ற மாநிலங்களில் கட்டுகடங்காத வகையில் கொரோனா தொற்றானது பரவி வருகிறது.

இதனால் பல மாநிலங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அரசு வெளியிட்டு வருகிறது.இதனையடுத்து ஓடிசாவில் அதிக அளவு கொரோனா தொற்று பரவும் 10 மாவட்டங்களுக்கு இரவு நேர ஊரடங்கை போட்டுள்ளது.ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் ஓடிசாவிலுள்ள சுந்தர்கர்,சம்பல்பூர்,பார்கர்,போலங்கீர்,நுவாபாடா,கலஹந்தி,நவரங்க்பூர்,கோராபுட்,மல்கன்கிரி ஆகிற பத்து மாவட்டங்களில் இருவு நேர ஊரடங்கை அமல்படுத்தி உள்ளனர்.இந்த மாவட்டங்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இந்த இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

Exit mobile version