அழகான நீளமான கூந்தல் என்பது பெண்களின் பெரிய கனவாகவே இருக்கிறது.தலையில் உள்ள முடி சுருண்டு இருப்பது சிலருக்கு பிடிக்கலாம்.ஆனால் பெரும்பாலானோர் அதை ஸ்ட்ரெய்ட் செய்யவே ஆசைப்படுகின்றனர்.
இதற்காக ஸ்ட்ரெய்ட்னர், ஷாம்பு, க்ரீம் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.இதனால் முடியின் ஆரோக்கியம் மோசமாகிறது.முடியின் அடர்த்தி மற்றும் வளர்ச்சி குறைந்துவிடும்.எனவே சுருள் முடியை நீளமாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹோம் ரெமிடியை அவசியம் பின்பற்றுங்கள்.
தேவையான பொருட்கள்:
1)முட்டை – ஒன்று
2)பால் – 1/4 கிளாஸ்
3)தயிர் – இரண்டு தேக்கரண்டி
4)தேன் – அரை தேக்கரண்டி
5)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
செய்முறை:
முதலில் ஒரு முட்டையை உடைத்து அதில் இருந்து வெள்ளைக் கருவை மட்டும் தனியாக பிரித்து ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி தயிர் சேர்த்து கரண்டி கொண்டு நன்கு கலக்குங்கள்.பிறகு கால் கிளாஸ் காய்ச்சாத பால்,அரை தேக்கரண்டி தேன் சேர்த்து மீண்டும் நன்றாக கலக்கவும்.
அதன் பிறகு ஒரு தேக்கரண்டி அளவு எலுமிச்சை சாறை அதில் சேர்த்து நன்கு கலந்து தலை முழுவதும் தடவவும்.இதை ஒரு மணி நேரத்திற்கு உலரவிட்டு பிறகு பூந்தி கொட்டை பவுடர் பயன்படுத்தி தலைமுடியை அலசி சுத்தம் செய்யவும்.
இவ்வாறு வாரத்திற்கு இரு தினங்கள் செய்து வந்தால் சுருண்ட முடி அனைத்தும் ஸ்ட்ரெய்ட்டாகி விடும்.
தேவையான பொருட்கள்:
1)ஆப்பிள் ஜூஸ் – ஒரு கிளாஸ்
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)முட்டை – ஒன்று
செய்முறை:
ஒரு ஆப்பிளை தோல் சீவி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சர் ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.பிறகு அதில் சிறிது தண்ணீர் சேர்த்து ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டவும். அதற்கு அடுத்து ஒரு முட்டையை உடைத்து வெள்ளைக்கருவை மட்டும் ஆப்பிள் சாறில் சேர்த்துக் கொள்ளவும்.பிறகு ஒரு தேக்கரண்டி தேனை அதில் சேர்த்து நன்கு கலக்கவும்.
இதை தலையின் வேர் முதல் இறுதி வரை தடவி ஒரு மணி நேரத்திற்கு ஊறவிடவும்.பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலை முடியை அலசி சுத்தப்படுத்தவும்.இவ்வாறு செய்து வந்தால் சுருண்ட முடி அனைத்தும் நேராகும்.