Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆளும் கட்சி கூட்டத்தில் கறி சோறுக்கு அடிதடி!!

#image_title

ஆளும் கட்சி கூட்டத்தில் கறி சோறுக்கு அடிதடி!!

கறி குழம்பு சமைக்கப்பட்ட பாத்திரத்தை தூக்க முடியாமல் இழுத்து சென்ற கட்சி தொண்டர்கள்.

தெலுங்கானா மாநிலம் மகபூபாத் மாவட்டம் சிரோலு நகரில் மாநில ஆளுங்கட்சியான பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின் கட்சி தொண்டர்களுக்கு பரிமாறுவதற்காக கறி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் அதிக அளவில் தொண்டர்கள் வந்திருந்ததால் அனைவருக்கும் கறி விருந்து கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டது. இதனை கவனித்த தொண்டர்கள் ஒரு கட்டத்தில் சாப்பாட்டுக்காக முட்டி மோதி கொண்டனர்.

இந்த நிலையில் ஒரு சில தொண்டர்கள் நமக்கு எப்படியும் கறி விருந்து கிடைக்காது என்று முடிவு செய்து கறி குழம்பு வைக்கப்பட்டிருந்த பெரிய பாத்திரத்தை தூக்க முடியாமல் இழுத்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இதனை கவனித்த மற்ற தொடர்கள் நாற்காலி,கட்டை ஆகியவற்றால் கறி குழம்பு பாத்திரத்தை இழுத்து சென்ற தொண்டர்களை தாக்கினர்.

பாதுகாப்புக்காக வந்திருந்த போலீசார் தலையிட்டு நிலைமை கை மீறி செல்லாமல் தடுத்து நிறுத்தினர். போலீசார் தலையீடு காரணமாக அங்கு ஏற்பட இருந்த கலவரம் தடுத்து நிறுத்தப்பட்டது.

கட்சி கூட்டத்திற்கு வந்திருந்து தொண்டர்களுக்கு தலைவர்கள் சாப்பாடு போட கூட கணக்கு பார்க்கின்றனர். ஆனால் நாங்கள் இந்த இந்த கட்சிக்காக சுமார் பத்து ஆண்டுகள் உழைத்து எங்களுடைய இளமை,சொத்து, சுகம் அனைத்தையும் இழந்து விட்டோம் என்று தொண்டர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Exit mobile version