சட்ட கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சுங்கச்சாவடி ஊழியர்கள்! அத்துமீறல் செயலை எதிர்த்து போராட்டம்!

0
135
Customs staff who attacked students! Protest against the act of encroachment!

சட்ட கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சுங்கச்சாவடி ஊழியர்கள்! அத்துமீறல் செயலை எதிர்த்து போராட்டம்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்ட கல்லூரி மாணவர்கள் தேர்வு எழுதிவிட்டு காரில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது அவர்கள் ஆந்திர மாநிலம் வடமலை பேட்டை சுங்கச்சாவடி வழியாக சென்றுள்ளனர்.அப்போது பாஸ்ட் ட்ராக் ஸ்கேன் செய்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது.அந்த தகராறில் 50க்கும் மேற்பட்ட சட்ட கல்லூரி மாணவர்கள் மீது சுங்கச்சாவடி ஊழியர்கள் கூலி படைகளை வைத்து தாக்குதல் நடத்தினார்கள்.

மேலும் 20க்கும் மேற்பட்ட வாகனங்களையும் அவர்கள் அடித்து நொறுக்கினார்கள். இந்த சம்பவத்தை கண்டித்து திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ரிபப்ளிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியினர்,சட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் என திரளானவர்கள் ஒன்றுகூடி சட்ட கல்லூரி மாணவர்களை தாக்கிய சம்பவத்தை கண்டித்தும் பேரணி நடத்தினார்கள்.

மேலும் அவர்கள் திருவள்ளூர் டோல்கேட் பகுதி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டம் குறித்து திருவள்ளூர் போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ரிபப்ளிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி நிர்வாகிகள் மற்றும் சட்ட கல்லூரி மாணவர்கள் என 30பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.