கட்டிங் கட்டிங் இலவச கட்டிங்! மாணவர்களின் முடியை பிடித்து ஆக்ஷனில் இறங்கிய தலைமை ஆசிரியர்!

0
150
Cutting Cutting Free Cutting! I'm Ready to Buy Cut! You ??

கட்டிங் கட்டிங் இலவச கட்டிங்! மாணவர்களின் முடியை பிடித்து ஆக்ஷனில் இறங்கிய தலைமை ஆசிரியர்!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் அருகே கண்டமங்கலத்தில் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு அதிக மாணவி மாணவர்கள்  பயின்று வருகின்றார்கள். அப்பள்ளியில் பயின்றுவரும் மாணவர்கள் ஒழுக்கத்துடனும், அறிவாற்றல் பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறியிருந்தார்.

சில மாணவர்கள் படிக்கும் வயதில் படித்து விட்டு வாழ்க்கையில் முன்னேறுவார்கள் அதுதான் படிக்கிற மாணவர்களுக்கு அழகு. சில மாணவர்கள் நான் மட்டும் தான் அழகு என்று காட்டிக் கொள்வார்கள்.அவற்றில் முக்கியமான ஒன்று அவர்கள் தலை சீவும் ஸ்டைல்தான். பெண்களைப் போலவே ரிப்பன் வைத்து கட்டிவிடலாம் அப்படி வளர்த்துக்கொண்டு ஸ்டைலாக விட்டு வருவார்கள் மாணவர்கள். சிலர் முன் பகுதியில் மட்டும் அதிக முடியை விட்டுவிட்டு பின்னாடி மொட்டை அடித்து விடுவார்கள் கேட்டால் ஸ்டைல் என்று சொல்வார்கள்.

இன்னும் சில  மாணவர்கள்  தலையில் கோடு போட்டு வருவார்கள். அவர்களையே அலங்கரிக்க நேரம் சரியா இருக்கும் நிலையில் எப்படி படிப்பில் கவனம் செலுத்துவார்கள். இதற்கு முற்றுப் புள்ளியாக கண்டமங்கலத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தானாகவே ஆக்ஷனில் இறங்கினார். பள்ளி வாசலில் நின்று பள்ளிக்கு வரும் மாணவர்களை கண்காணித்து வந்திருக்கின்றார். அப்போது  ஒவ்வொரு மாணவர்களையும் அழைத்து  தலை முடியை பிடித்து என்ன கட்டிங் என்று கேட்டுக் கொண்டிருந்தார். நம்ம பசங்க கூறும் ஒரே பதில் ஸ்டைலிங் சார் என்பது தான்.

கையில் இழுத்து  பிடித்த முடியை விடாமல் கட்டிங் செய்வதாக கூறி கத்திரிக்கோலை எடுத்து வருமாறு பிற ஆசிரியர்களை எடுத்துவரச் சொன்னார். முன் பகுதியில் இருக்கும் அதிக முடியை வெட்டினார். இப்ப உள்ளே போ என்று அச்சிறுவனை உள்ளே அனுப்பினார். மேலும் சில மாணவர்கள் பரட்டைத்தலை போட்டுக் கொண்டு வந்தார்கள். அவர்களையும் விட்டு வைக்காத அந்த பள்ளி தலைமை ஆசிரியர் எண்ணைய் எடுத்து வரச் சொல்லி தேய்க்க சொன்னார். பள்ளி மாணவர்களோ செய்வதென்று தெரியாமல் எண்ணெயை தேய்த்தார்கள். இதைப் பார்த்து கொண்டிருந்த பொதுமக்கள் அனைவரும் சிரித்து கொண்டு   நின்றனர்.

என்னதான் பாடம் சொல்லிக் கொடுக்க ஆசிரியர் இருந்தாலும் நல்ல குணங்களைச் சொல்லிக் கொடுக்கவும் சில ஆசிரியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். தலைமை ஆசிரியர் சொன்ன ஒரே பதில் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள் பிறகு பாடங்களைப் படியுங்கள் அதுவே உன் வாழ்வில் துணையாக நிற்கும் என்றார்.