Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கூவத்தூரில் ஊற்றி கொடுத்தது தினகரன் தான்! விளாசியெடுத்த சி வி சண்முகம்

CV Shanmugam Speaks about Vikravandi By Election-News4 Tamil Latest Online Tamil News Today

CV Shanmugam Speaks about Vikravandi By Election-News4 Tamil Latest Online Tamil News Today

கூவத்தூரில் ஊற்றி கொடுத்தது தினகரன் தான்! விளாசியெடுத்த சி வி சண்முகம்

 

இன்று விழுப்புரத்தில் பத்திரிக்கையாளரை சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தினகரனை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அவர் பேசியதாவது, அதிமுகவை ஒருவர் கைப்பற்றுவதாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்.அவர் அதிமுகவை கைப்பற்றுவது இருக்கட்டும்.முதலில் சசிகலாவுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். டி.டி.வி. தினகரனிடமிருந்து உங்களை முதலில் காப்பாற்றி கொள்ளுங்கள்.

 

குடும்பத்திலிருந்து சசிகலா தன்னை காப்பாற்றி கொள்ளவேண்டும். முதலில் அவர் குடும்பத்தில் ஒற்றுமையை காப்பாற்றிக்கொள்ள சொல்லுங்கள்.சிறைக்கு செல்லும் முன்பாக தினகரன் அவர்களை நம்பி தான் கட்சியையும், ஆட்சியியையும் ஒப்படைத்து விட்டு சென்றார்.ஆனால் என்ன நடந்தது.

 

அடிக்கடி நான் நிதானமாக பேசுகிறேனா..? என தினகரன் கேட்கிறார். ஆமாம் இவர்தான் எனக்கு “ஊத்திக்” கொடுத்தாரா. கூவத்தூரில் ஊத்தி கொடுத்தது இவர் தானே. அவரோட தொழிலே “ஊத்திக்” கொடுப்பதுதான். ஊத்திக் கொடுத்தே குடியை கெடுத்தவர்கள் தானே அவர்கள்.

 

கூவத்தூரில் ஊத்திக் கொடுத்ததை இல்லை என்று அவரை சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம். எந்த காலத்திலும், எந்த நிலையிலும், எந்த சூழ்நிலையிலும் அதிமுக என்பது ஒன்றரை கோடி தொண்டர்ககளின் உழைப்பிலும், இரத்தத்தாலும் உருவாக்கப்பட்டது என்பதே உண்மை.

 

இந்த இயக்கம் எந்த காலத்திலும் எந்த குடும்பத்திற்கும் அடிமையாக இருக்காது என அவர் காட்டமாக பேசியுள்ளார்.

Exit mobile version