கல்லூரி பாடத்தித்திட்டத்தில் சைபர் கிரைம் பாடம்… கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் அதிரடி அறிவிப்பு!!

0
76

 

கல்லூரி பாடத்தித்திட்டத்தில் சைபர் கிரைம் பாடம்… கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் அதிரடி அறிவிப்பு…

 

புதுச்சேரியின் கல்லூரிகளில் சைபர் கிரைம் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் அவர்கள் அறிவித்துள்ளார்.

 

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் தொழில்நுட்ப வளர்ச்சியை விரைவுபடுத்துதல் தொடர்பாகவும், மாதிரி கிராமம் ஏற்படுத்துதல் தெடர்பாகவும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி ஆளூநர் தமிழிசை சவுந்தர்ராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

 

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை செயலர் ராஜீவ் வர்மா, வளர்ச்சி ஆணையர் ஜவகர், ஊரக வளர்ச்சித் துறை செயலர் நெடுஞ்செழியன், தொழில்நுட்பத்துறை செயலர் மணிகண்டன், மாவட்ட கலெக்டர் வல்லவன், கவர்னரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்திரி மற்றும் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் அவர்கள் “புதுச்சேரியில் தொழில்நுட்ப வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு வேண்டிய அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும். ஸ்கில்டா மூலமாக தொழிற்கல்வி பயிலும் 4000 மாணவர்களுக்கும், பிற கல்லூரிகளை சேர்ந்த 15000 மாணவர்களுக்கும் டிஜிட்டல் திறன் மேம்பாடு குறித்த பயிற்சி அளிக்க வேண்டும்.

 

கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவில் சைபர் கிரைம் குறித்த பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று மானியக்குழு கோரியுள்ளது. சைபர் கிரூம் குறித்த பாடத்திட்டம் மாணவர்களின் வேலை வாய்ப்புக்கு பெரிதும் உதவியாக இருக்கும். அதனால் கல்லூராகளில் சைபர் கிரைம் குறித்த பாடத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

பள்ளி மாணவர்களுக்கு சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது குறித்து பள்ளி மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக உள்ளூரில் தொழாற்நுட்ப நிறுவனங்கள், தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் ஆகியவை தொழில் தொடங்குவதற்கு ஊக்கம் அளிக்க வேண்டும்” என்று கூறினார்.