Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்! உருவாகிறது புயல் – என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதெர்மேன்!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்! உருவாகிறது புயல் - என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதெர்மேன்!

tn weather man report

கடந்த மூன்று தினங்களாக தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. அக்னி வெயில் முடிந்த பிறகு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய தொடங்கிய நிலையில், தற்போது அது ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கும் அளவுக்கு அதி தீவிரம் அடைந்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி கோவை மாவட்டங்களில் 17 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் எடுத்துள்ள செய்தி குறிப்பின்படி, தென் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழ் எடுக்க சுழற்சி நிலவுவதால், இன்று முதல் 22 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலின் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன். மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன். லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

106-percent-rain-this-year-india-meteorological-department-information
106-percent-rain-this-year-india-meteorological-department-information

இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்துக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், வருகின்ற 22 ஆம் தேதி தமிழகத்தை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து, வரும் 24ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் வானிலை முன்னறிவிப்புகளை வெளியிட்டு வரும் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் விடுத்துள்ள செய்தி குறிப்பில், வங்கக் கடலில் மே 22ஆம் தேதி உருவாக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் என்றும், காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version