விதவை பெண்ணை மறுமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ள டி.இமான்!

0
169

விதவை பெண்ணை மறுமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ள டி.இமான்!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரும், பாடகருமான டி.இமான் தனது மனைவியை சமீபத்தில் விவாகரத்து செய்து பிரிந்தார். இது திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்த தகவலை டி.இமான் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அவர் வெளியிட்டிருந்த அந்த டிவிட்டர் பதிவில்,

வாழ்க்கை நம்மை பல்வேறு பாதைகளுக்கு இட்டுச் செல்லும். அந்த வகையில் நானும் எனது மனைவியும் சட்ட ரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். எனது நலன் மீது அக்கறை கொண்டவர்கள் அனைவரும் எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்து, நாங்கள் முன்னோக்கி செல்ல உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டிருந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், டி.இமான் விரைவில் மறுமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து டி.இமான் அளித்துள்ள பேட்டியில், தனிப்பட்ட முறையில் விவாகரத்து கூடாது என்பதுதான் எனது எண்ணம். என் குழந்தைகளுக்கு நல்ல தந்தையாக இருப்பேன்.

நான் மறுமணம் செய்து கொள்ள குடும்பத்தினர் விரும்புகின்றனர். அடுத்து நான் திருமணம் செய்தாலும் குடும்பத்தினர் நிச்சயித்த திருமணமாகத்தான் அது இருக்கும். விதவை அல்லது விவாகரத்து செய்த பெண்ணாகவும், குழந்தை இருக்கும் பெண்ணாகவும் பாருங்கள் என்று குடும்பத்தினரிடம் கூறியுள்ளேன். குழந்தை இருக்கும் பெண்தான் எனது குழந்தைகளையும் தனது குழந்தைபோல் பார்த்துக் கொள்வாள் இவ்வாறு அவர் கூறினார்.