Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

‘யாருப்பா இவங்க…! ’ ரயிலில் பாடி அசத்திய பெண்ணை தேடும் இசையமைப்பாளர் இமான்!

‘யாருப்பா இவங்க…! ’ ரயிலில் பாடி அசத்திய பெண்ணை தேடும் இசையமைப்பாளர் இமான்!

சமீபத்தில் இணையத்தில் ஒரு பாடல் வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் இருந்த பெண் அனைவரையும் கவர்ந்தார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரும், பாடகருமான டி.இமான் தனது இசையில் நிறைய புதுமுக பாடகர்களை அறிமுகப்படுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பார்வைத்திறனற்ற மாற்றுத்திறனாளி மாணவர் திருமூர்த்தியின் பாடலைக் கேட்டு அவரை தன்னுடைய சீறு படத்தில் பாடவைத்தார். அதன் பின்னர் இப்போது திருமூர்த்தி பரவலாக கவனம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஒரு வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வைரலானது. அந்த வீடியோவில் ‘ரயிலில் ஜீன்ஸ் படத்தில் இடம்பெற்ற கண்ணோடு காண்பதெல்லாம் பாடலை ஒரு பெண் அருமையாக பாடியிருந்தார். கையில் ஒரு சிறு வாத்திய கருவியோடு அவர் பாடிய அந்த பாடல் இணையத்தில் வைரலாந்து’. பலரும் அந்த பெண்ணை பாராட்டி வீடியோவைப் பகிர்ந்தனர்.

அந்த வீடியோ இப்போது இசையமைப்பாளர் இமான் கண்ணில் பட, வீடியோவில் இருக்கும் பெண் யார்? அவரைப் பற்றிய விவரங்கள் தெரிந்தவர்கள் பகிருங்கள் எனக் கேட்டுள்ளார். இதனால் திருமூர்த்தி போல அந்த பெண்ணுக்கும் தன் இசையில் பாட வாய்ப்பளிப்பார் என நம்பப்படுகிறது.

Exit mobile version