எதற்காக இந்த நாடகம்! ஸ்டாலினையும் உதயநிதி ஸ்டாலினையும் கிழித்து தொங்க விடும் நெட்டிசன்கள்!

0
167

தருமபுரம் ஆதீன மடத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி தருமபுரம் ஆதீனம் 26ஆவது குருமகா சன்னிதானத்தை சந்தித்து ஆசீர்வாதம் பெற்ற புகைப்படத்தை நினைவு பரிசாக உதயநிதிக்கு 27வது குருமகா சன்னிதானம் வழங்கியிருக்கின்றார்.

விடியலை நோக்கி ஸ்டாலின் என்கின்ற தேர்தல் பிரச்சார பயனத்துடைய ஒரு பகுதியாக மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் தர்மபுரம் ஆதீனம் 27-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீ லஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.

அந்த சமயம் 27வது குருமகா சன்னிதானம் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு திருநீறு பூசி ஆசீர்வாதம் வழங்கி இருக்கின்றார். அதன் தொடர்ச்சியாக, தமிழ் கடவுள் சேயோன் முருகன் பாமாலை என்ற மயிலாடுதுறை ஆன்மீக பேரவை தொகுத்து அளித்த நூலினை தருமபுரம் ஆதீனம் வெளியிட அதனை உதயநிதி ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.

1972ம் வருடம் தருமபுரம் ஆதீன கல்லூரியின் வெள்ளி விழாவின் போது, தருமபுரம் ஆதீன மடத்தில் கருணாநிதி தருமபுரம் ஆதீனம் 26ஆவது குருமகாசந்நிதானத்தை சந்தித்து ஆசி பெற்ற புகைப்படத்தை நினைவு பரிசாக உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு 27வது குருமகாசன்னிதானம் வழங்கி இருக்கின்றார். இதனை அடுத்து, 26வது குருமகா சன்னிதானம் முக்தி பெற்று ஒரு வருடம் நிறைவடைவதை அடுத்து வெளியிடப்பட இருக்கின்ற குருபூஜை மலருக்கான திமுக தலைவரின் வாழ்த்துச் செய்தியை உதயநிதி ஸ்டாலின் குருமகாசன்னிதானம் சொல்லி ஆசி பெற்றுக்கொண்டார்.

தேவர் குருபூஜைக்கு போன திமுக தலைவர் ஸ்டாலின் அங்கே அவருக்கு வழங்கப்பட்ட திருநீரை நெற்றியிலிருந்து அழித்துவிட்ட விவகாரம் இன்னும் முடிவடையவில்லை. ஆனாலும் ஸ்டாலினுடைய மகனான, உதயநிதி தருமபுரம் ஆதீனம் அவர்களிடம் ஆசிபெற்று திருநீரு பூசி இருக்கின்றார் இது கட்சித் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.