Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது அறிவிப்பு

தாதாசாகெப் பால்கே விருது (Dadasaheb Phalke Award) இந்திய திரைப்பட துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும்.இவ்விருது, இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக் கருதப்படும் தாதாசாகெப் பால்கே அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டான 1969 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.குறிப்பிட்ட ஆண்டுக்கான விருது, அதற்கு அடுத்த ஆண்டு இறுதியில் தேசியத் திரைப்பட விருதுகளுடன் சேர்த்து வழங்கப்படுகிறது.

2020 ஆம் ஆண்டுக்கான தாதாசாகெப் பால்கே விருது வழங்கும் பட்டியல் வெளியானது.அதில் சிறந்த திரைப்படமாக டூலெட் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதே போல் சிறந்த நடிகர்கான விருதை தனுஷ் அவர்களுக்கு அசுரன் படத்திற்க்காக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சிறந்த நடிகைக்கான விருது ராட்சசி படத்திற்க்காக ஜோதிகாவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் சிறந்த இயக்குனர் ஆன விருதை ஒத்த‌ செருப்பு படத்திற்க்காக பார்த்திபன் அவர்களுக்கு அறிவித்துள்ளார்கள்.

சிறந்த இசையமைப்பாளர் கான விருதை அனிருத் அவர்களுக்கும், பன்முகத்திறமை கொண்ட நடிகர் கான விருதை தல அஜித் குமார் அவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது‌.

Exit mobile version