Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்றைய ராசி பலன் 02-09-2020 Today Rasi Palan 02-09-2020

இன்றைய ராசி பலன்- 02-09-2020

நாள் : 02-09-2020

தமிழ் மாதம்:

ஆவணி 17, புதன்கிழமை,,

நல்ல நேரம்:

காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை.

இராகு காலம்:

மதியம் 12.00 முதல் 1.30 வரை.

 எம கண்டம்:

காலை 7.30 முதல் 9.00 வரை.

குளிகன்:

பகல் 10.30 முதல் 12.00 வரை,

திதி:

பௌர்ணமி திதி பகல் 10.52 வரை பின்பு தேய்பிறை பிரதமை.

நட்சத்திரம்:

சதயம் நட்சத்திரம் மாலை 06.33 வரை பின்பு பூரட்டாதி.

சித்தயோகம் மாலை 06.33 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. மஹாலயபட்சம் ஆரம்பம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இன்று உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் சற்று குறையும்.எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே இன்றைய நாள் பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிட்டும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபார ரீதியான நெருக்கடிகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாகவும் எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே இன்றைய நாள் பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகள் புது தெம்பை தரும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு கிடைக்கும்.

துலாம்

துலா ராசிக்காரர்களே இன்றைய நாள் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்தில் புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே இன்று வீட்டில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க தாமதமாகும். உறவினர்கள் உதவியால் கடன் பிரச்சினை குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவதற்கான வாய்ப்பு உண்டாகும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே இன்றைய நாள் உங்கள் ராசிக்கு நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் தாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களுடன் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். தொழிலில் பணியாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் வரவிருக்கும் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இன்றைய நாள் உங்களுக்கு இருக்கும் மனக்குழப்பங்கள் விலகி நிம்மதி ஏற்படும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவுடன் புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். சுபகாரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர்.

 

 

 

 

Exit mobile version