Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அமைதியாக இருப்பது நல்லது! இன்றைய ராசி பலன் 06-12-2020 Today Rasi Palan 06-12-2020

இன்றைய ராசி பலன்- 06-12-2020

நாள் : 06-12-2020

தமிழ் மாதம்: 

 கார்த்திகை 21, ஞாயிற்றுக்கிழமை

 சுப ஹோரைகள் 

காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

இராகு காலம்: 

மாலை 4.30 முதல் 6.00 வரை

எம கண்டம்: 

மதியம் 12.00 முதல் 1.30 வரை

குளிகன்: 

 பிற்பகல் 3.00 முதல் 4.30 வரை 

திதி: 

 திதி இரவு 07.45 வரை பின்பு தேய்பிறை சப்தமி.

நட்சத்திரம்: 

ஆயில்யம் நட்சத்திரம் பகல் 02.46 வரை பின்பு மகம்.

சித்தயோகம் பகல் 02.46 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சஷ்டி விரதம். முருக — நவகிரக வழிபாடு நல்லது.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் ஏற்படும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பெரியவர்களின் ஆலோசனைகளால் வாழ்வில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

 

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

 

மிதுனம்

 

மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு சுபசெலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

 

கடகம்

 

கடக ராசிக்காரர்களே உங்களுக்கு பொருளாதார நிலை சற்று சுமாராக இருக்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் மன அமைதி குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பணபற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமுடன் செயல்படுவது நல்லது.

 

சிம்மம்

 

சிம்ம ராசிக்காரர்களே உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கடன் பிரச்சினைகள் குறைந்து நிம்மதி உண்டாகும்.

 

கன்னி

 

கன்னி ராசிக்காரர்களே உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும். தெய்வ வழிபாடு நல்லது.

 

துலாம்

 

துலா ராசிக்காரர்களே உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

 

விருச்சிகம்

 

விருச்சிக ராசிக்காரர்களே நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பழைய கடன்கள் வசூலாகும்.

 

தனுசு

 

தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வு, சுறுசுறுப்பின்மை ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 02.46 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எடுக்கும் காரியங்களில் இடையூறுகள் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

 

மகரம்

 

மகர ராசிக்காரர்களே நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு பகல் 02.46 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அமைதியாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.

 

கும்பம்

 

கும்பராசிக்காரர்களே உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகதுச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெற்றோர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.

 

மீனம்

 

மீன ராசிக்காரர்களே இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சுபகாரியங்கள் எளிதில் கைகூடும்.

 

Exit mobile version