Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ராசிக்கு ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்! இன்றைய ராசி பலன் 11-11-2020 Today Rasi Palan 11-11-2020

இன்றைய ராசி பலன்- 11-11-2020

நாள் : 11-11-2020

தமிழ் மாதம்: 

ஐப்பசி 26, புதன்கிழமை

நல்ல நேரம்: 

காலை 11.15 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை.

இராகு காலம்: 

மதியம் 12.00 முதல் 1.30 வரை

எம கண்டம்:

காலை 7.30 முதல் 9.00 வரை

குளிகன்:

பகல் 10.30 முதல் 12.00 வரை

திதி:

ஏகாதசி திதி பின்இரவு 12.41 வரை பின்பு தேய்பிறை துவாதசி

நட்சத்திரம்:

பூரம் நட்சத்திரம் காலை 06.28 வரை பின்பு உத்திரம் நட்சத்திரம் பின்இரவு 04.25 வரை பின்பு அஸ்தம்.

அமிர்தயோகம் பின்இரவு 04.25 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

 

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும். பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பற்றாக்குறையை தவிர்க்கலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே உடலில் சிறுசிறு உபாதைகள் தோன்றி மறையும். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளின் உதவியால் லாபம் கிட்டும். உங்கள் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உணவு விஷயத்தில் கவனம் தேவை.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். சகோதர, சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன் ஏற்படும்.

துலாம்

துலா ராசிக்காரர்களே எளிதில் முடியும் காரியம் கூட காலதாமதமாக முடியும். கணவன் மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்களின் முயற்சியால் சுபகாரியங்கள் கைகூடும். தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவு கிட்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே இல்லத்தில் தாராள தன வரவும், லஷ்மி கடாட்சமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து கடன் உதவி கிட்டும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே உத்தியோகத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கடன் பிரச்சனை தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு பகல் 12.00 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது. வியாபார ரீதியான புதிய முயற்சிகளை மதியத்திற்கு பின் செய்வது உத்தமம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு பகல் 12.00 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடாமல் தவிர்ப்பது உத்தமம். தூரப் பயணங்களில் கவனம் தேவை.

மீனம்

மீன ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையினால் குடும்பத்தில் சந்தோஷம் கூடும். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும்.

Exit mobile version