Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் ! இன்றைய ராசி பலன் 15-11-2020 Today Rasi Palan 15-11-2020

இன்றைய ராசி பலன்- 15-11-2020
நாள்15-11-2020
தமிழ் மாதம்:
ஐப்பசி 30, ஞாயிற்றுக்கிழமை,
நல்ல நேரம்:
காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 3.15 மணி முதல் 4.15 மணி வரை.
இராகு காலம்:
மாலை 4.30 முதல் 6.00 வரை
எம கண்டம்:
மதியம் 12.00 முதல் 1.30 வரை
குளிகன்:
பிற்பகல் 3.00 முதல் 4.30 வரை
திதி:
அமாவாசை திதி பகல் 10.37 வரை பின்பு வளர்பிறை பிரதமை.
நட்சத்திரம்:
விசாகம் நட்சத்திரம் மாலை 05.15 வரை பின்பு அனுஷம்.
நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. கந்த சஷ்டி விரதம் ஆரம்பம். வாக்கியப்படி குரு பெயர்ச்சி இரவு 09.36 மணிக்கு. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு பகல் 11.58 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறுவதில் தடை தாமதங்கள் ஏற்படும். எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே எந்த செயலையும் மன துணிவோடு செய்து முடிப்பீர்கள். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். பெரிய மனிதர்களின் ஆதரவால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். சுபகாரியங்கள் கைக்கூடும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வியாபாரத்தில் வருமானம் பெருகும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். கடன் பிரச்சினைகள் குறையும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே எடுக்கும் காரியத்தை செய்து முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிலும் நிதானம் தேவை.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் இடையூறுகள் ஏற்படும். செய்யும் செயல்களில் கவனம் தேவை. கடின உழைப்பால் மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே குடும்பத்தில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளால் நல்ல செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். நினைத்த காரியம் நிறைவேறும்.

துலாம்

துலா ராசிக்காரர்களே தேவையற்ற பிரச்சினைகளால் குடும்பத்தில் நிம்மதி குறையும். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி சாதகமான பலன் ஏற்படும். ஆடம்பர பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகலாம். பிள்ளைகளால் மனநிம்மதி குறையும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் உதவியால் பணப்பற்றாக்குறை நீங்கும். வீட்டுத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். உறவினர்கள் வழியில் சுப செய்தி வரும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். தொழில் விஷயமாக வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும். கொடுத்த கடன் கைக்கு வந்து சேரும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களே இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளால் மன அமைதி குறையலாம். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 11.58 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற விரயங்கள் ஏற்படலாம். மதியத்திற்கு பின் மன உளைச்சல்கள் குறைந்து சாதகமான சூழ்நிலை உருவாகும்.

Exit mobile version