Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ராசிக்கு இன்று எதிர்பார்க்காத லாபம் கிடைக்கும்! இன்றைய ராசி பலன் 17-11-2020 Today Rasi Palan 17-11-2020

 

இன்றைய ராசி பலன்- 17-11-2020

நாள் : 17-11-2020

தமிழ் மாதம்:

கார்த்திகை 02, செவ்வாய்க்கிழமை,

நல்ல நேரம்: 

காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை.

இராகு காலம்: 

மதியம் 3.00 முதல் 4.30 வரை

எம கண்டம்: 

பகல் 9.00 முதல் 10.30 வரை

குளிகன்:

பிற்பகல் 12.00 முதல் 1.30 வரை

திதி:

திரிதியை திதி பின்இரவு 01.18 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி.

நட்சத்திரம்:

கேட்டை நட்சத்திரம் பகல் 12.21 வரை பின்பு மூலம்.

மரணயோகம் பகல் 12.21 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படலாம். எதிர்பாராத செலவுகளால் பண நெருக்கடிகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 12.21 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் கவனம் தேவை. புதிய முயற்சிகளை மதியத்திற்கு பின் தொடங்குவது நல்லது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே உங்கள் உடல்நிலையில் சோர்வும் சுறுசுறுப்பின்மையும் தோன்றும். எந்த ஒரு வேலையிலும் ஈடுபாடின்றி செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு பகல் 12.21 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் காலதாமதம் ஏற்படும். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகேற்ற உயர் பதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் அமையும். வியாபாரம் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். சேமிப்பு உயரும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே உங்களுக்கு பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிட்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் தோன்றி மறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன் கிட்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே குடும்பத்தில் உடன்பிறந்தவர்கள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்களால் வீண் விரயங்கள் ஏற்படும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும்.

துலாம்

துலா ராசிக்காரர்களே உங்களின் பலமும் வலிமையும் கூடும். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்துவிடுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்காத லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே நீங்கள் செய்யும் செயல்களில் உழைப்பிற்கேற்ற பலன் இருக்காது. வேலைபளு அதிகரிக்கும். தொழில் ரீதியான கொடுக்கல் வாங்கலில் அனுகூலப் பலன் உண்டாகும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அளிக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். உத்தியோக ரீதியான பயணங்களில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்கள் கைகூடும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதில் தாமதம் உண்டாகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். சுபகாரிய முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப்பலன் கிட்டும். குடும்ப பிரச்சினைகள் சற்று குறையும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியை தரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களோடு ஒற்றுமையாக செயல்பட்டு நற்பலன் அடைவீர்கள். உற்றார் உறவினர்களால் ஆதாயங்கள் உண்டாகும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் வீண் அலைச்சல்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். நெருங்கியர்களின் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறைந்து மன மகிழ்ச்சி ஏற்படும்.

Exit mobile version