Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ராசிக்கு இன்று சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம்! இன்றைய ராசி பலன் 02-11-2020 Today Rasi Palan 02-11-2020

இன்றைய ராசி பலன்- 02-11-2020

நாள் : 02-11-2020

தமிழ் மாதம்: 

ஐப்பசி 17 , திங்கட்கிழமை

நல்ல நேரம்: 

காலை 6.15 மணி முதல் 7.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை.

இராகு காலம்: 

காலை 7.30 முதல் 9.00 வரை

எம கண்டம்:

பகல் 10.30 முதல் 12.00 வரை

குளிகன்:

மதியம் 1.30 முதல் 3.00 வரை

திதி:

துதியை திதி பின்இரவு 01.14 வரை பின்பு தேய்பிறை திரிதியை.

நட்சத்திரம்:

கிருத்திகை நட்சத்திரம் இரவு 11.49 வரை பின்பு ரோகிணி.

மரணயோகம் இரவு 11.49 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. கிருத்திகை. முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படலாம். திருமண முயற்சிகளில் மந்த நிலை உண்டாகும். வாகனங்களில் செல்லும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. உடன்பிறந்தவர்கள் உறுதுனையாக இருப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பிள்ளைகள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள், பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும். வியாபார ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். எதிர்பாராத உதவி கிடைக்கும். கடன்கள் குறையும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே உங்களுக்கு மனஅமைதியும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையும் உண்டாகும். சகோதர சகோதரிகளால் அனுகூலப் பலன் கிட்டும். உத்தியோகத்தில் வேலைபளு சற்று அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பார்த்த காரியம் எளிதில் நிறைவேறும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் ஏற்படலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பெரிய மனிதர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

துலாம்

துலா ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்ய நினைக்கும் காரியங்களில் காலதாமதம் உண்டாகும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே உங்களுக்கு மன அமைதி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே பிள்ளைகள் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்த வங்கி கடன் கிட்டும். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிட்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே நீங்கள் எந்த ஒரு காரியத்திலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். வீண் செலவுகளால் சேமிப்பு கரையும். சிக்கனமுடன் இருப்பது நல்லது. கூட்டாளிகளின் ஆலோசனையால் தொழிலில் லாபம் கிட்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். உற்றார் உறவினர்களால் வீண் பிரச்சினைகள் தேடி வரலாம். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். வேலையில் உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப்பலன் கிட்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவார்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும்.

Exit mobile version