Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ராசிக்கு இன்று பழைய கடன்கள் வசூலாகும்! இன்றைய ராசி பலன் 26-11-2020 Today Rasi Palan 26-11-2020

 

இன்றைய ராசி பலன்- 26-11-2020

நாள் : 26-11-2020

தமிழ் மாதம்:

கார்த்திகை 11, வியாழக்கிழமை,

நல்ல நேரம்: 

காலை 12.30 மணி முதல் 1.30 மணி வரை,

இராகு காலம்: 

மதியம் 1.30 முதல் 3.00 வரை

எம கண்டம்:

காலை 6.00 முதல் 7.30 வரை

குளிகன்:

காலை 9.00 முதல் 10.30 வரை

திதி:

நாள் முழுவதும் வளர்பிறை துவாதசி திதி.

நட்சத்திரம்:

ரேவதி நட்சத்திரம் இரவு 09.20 வரை பின்பு அஸ்வினி.

 

சித்தயோகம் இரவு 09.20 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

 

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். வேலையில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படக்கூடும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு நல்ல முன்னேற்றத்தை தரும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும். சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வருமானம் பெருகும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு வேலையில் பணிசுமை அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புடன் எளிதில் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியை அளிக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படும். குடும்பத்தில் உள்ள நெருக்கடிகளை சமாளிக்க நீங்கள் பொறுப்புடனும், சிக்கனத்துடனும் நடந்து கொள்வது அவசியம். உற்றார் உறவினர்கள் ஓரளவு ஆதரவாக செயல்படுவார்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது நல்லது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும்.

துலாம்

துலா ராசிக்காரர்களே உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பழைய கடன்கள் வசூலாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே உங்களுக்கு வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் உண்டாகலாம். வீட்டு தேவைகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உறவினர்களின் உதவியால் பணப்பற்றாக்குறை ஓரளவு நீங்கும். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் அமைதி குறையக்கூடும். வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிட்டும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளியின் சேர்க்கையால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே குடும்பத்தில் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

மீனம்

மீனராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். தொழில் ரீதியான பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும்.

Exit mobile version