Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ராசிக்கு இன்று புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள் ! இன்றைய ராசி பலன் 05-11-2020 Today Rasi Palan 05-11-2020

இன்றைய ராசி பலன்- 05-11-2020

நாள் : 05-11-2020

தமிழ் மாதம்: 

ஐப்பசி 20, வியாழக்கிழமை.

நல்ல நேரம்: 

காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை, பகல் 11.30 மணி முதல் 12.30 மணி வரை.

இராகு காலம்: 

மதியம் 1.30 முதல் 3.00 வரை

எம கண்டம்: 

காலை 6.00 முதல் 7.30 வரை

குளிகன்:

காலை 9.00 முதல் 10.30 வரை

திதி:

நாள் முழுவதும் பஞ்சமி திதி

நட்சத்திரம்:

நாள் முழுவதும் திருவாதிரை நட்சத்திரம்.

 

நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

 

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோக சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். கடன் பிரச்சினை தீரும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே நீங்கள் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பணப் பிரச்சினையில் இருந்து விடுபட சிக்கனமுடன் செயல்பட வேண்டும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு திடீர் தனவரவு உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே உறவினர்களால் வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானமாக நடந்து கொண்டால் உயர்வு கிட்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை கூடும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே உங்களுக்கு பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சினை குறைந்து மன அமைதி உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். வேலையில் உடனிருப்பவர்களால் அனுகூலப் பலன் கிட்டும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு உதவும். நண்பர்கள் ஆறுதலாக இருப்பார்கள்.

துலாம்

துலா ராசிக்காரர்களே வியாபாரத்தில் பொருளாதார நிலை சற்று மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காமல் ஏமாற்றம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் கிட்டும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாடு செய்வது நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்த்தால் பிரச்சினைகள் குறையும். எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுபகாரியங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். பணப்பிரச்சினைகள் குறைந்து நிம்மதி நிலவும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பிள்ளைகள் பாசத்துடன் இருப்பார்கள். உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். வராத கடன்கள் வசூலாகும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மனசங்கடங்கள் ஏற்படலாம். பெண்களுக்கு வேலைபளு சற்று குறையும். புதிய யோசனைகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

மீனம்

மீன‌ ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய நபர்களிடம் சற்று எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. சிக்கனமாக செயல்பட்டால் தேவைகள் நிறைவேறும்

Exit mobile version