Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தினசரி ஊதியம்.. சுய தொழில் போன்றவர்களுக்கும் ஓய்வூதியம்!! மத்திய அரசின் அசத்தல் திட்டம்!!

Daily wage earners.. Pension for self-employed people too!! Amazing scheme of the central government!!

Daily wage earners.. Pension for self-employed people too!! Amazing scheme of the central government!!

பொதுவாக அரசு பணிகளில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் ஒரு சில தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கக் கூடியவர்களுக்கு ஓய்வூதியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தினசரி சம்பளம் பெறக்கூடியவர்கள் மற்றும் சுய தொழில் மேற்கொள்பவர்கள், ஓய்வூதிய திட்டம் இல்லாத பிற சிறு தொழில்களை மேற்கொள்ள கூடியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.

இதன்படி, 2015 16ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் துவங்கப்பட்ட அடல் பென்ஷன் யோஜனா திட்டம் மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் மாத மாதம் 5000 ரூபாய் ஓய்வூதியமாக வழங்குவதற்கு வழிவகை செய்கிறது. இதில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்படலாம் என்றும் இந்த திட்டத்தில் குறைந்த அளவாக 7 ரூபாய் முதல் டெபாசிட் செய்த பயன்படலாம் என்றும் ஒரு நாளைக்கு 7 ரூபாய் என்றால் மாதத்திற்கு 210 மட்டுமே டெபாசிட் செய்வதன் மூலம் இந்த ஓய்வூதியத்தை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுருக்கிறது.

மேலும், 60 வயது துவங்கியவுடன் டெபாசிட் செய்த அனைவருக்கும் மாதமாதம் ஐயாயிரம் ரூபாய் 60 வயது துவங்கியவுடன் டெபாசிட் செய்த அனைவருக்கும் மாதா மாதம் 5000 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படும் என்றும் 40 வயதில் இந்த திட்டத்தில் டெபாசிட் செய்பவர்களுக்கு 1454 பிரீமியம் நிலுவைத் தொகைகளை செலுத்த வேண்டி இருக்கும் என்றும் அதனை செலுத்தி முடித்த பின்பு ஐயாயிரம் ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஒரு மாதத்திற்கு 47 முதல் 210 வரை டெபாசிட் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version