அடடே, இது தெரியாமல் போச்சே!! மூட்டு வலியை போக்கும் தேங்காய் நார் நீர்!!

0
101
Damn, don't know this!! Coconut fiber water to relieve joint pain!!

அடடே, இது தெரியாமல் போச்சே!! மூட்டு வலியை போக்கும் தேங்காய் நார் நீர்!!

பொதுவாக நம்மில் பலருக்கு தேங்காய், தேங்காய் தண்ணீர், இளநீர் என்றால் கொள்ளை பிரியம் என்றே சொல்லலாம். தேங்காய் தண்ணீர், இளநீர் எவ்வளவு நமக்கு பயனுள்ளதாக இருக்கிறதோ அதுபோலவே தேங்காயிலிருந்து கிடைக்கும் தேங்காய் நாரும் நமக்கு பயன் தர கூடியதே. பெரும்பாலான வீடுகளில் தேங்காய் என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

சாப்பாட்டிற்கு பயன் படுத்துவதிலிருந்து முகம் முடி, சரும பிரச்சனைகள் அனைத்துக்கும் தேங்காய் ஒரு மிகப்பெரிய தீர்வாக இருந்து வருகிறது. ஆனால் இதிலிருந்து கிடைக்கும் தேங்காய் நார் பயனற்றது என நினைத்து நம்மில் பலரும் தூக்கி எறிந்து விடுகிறார்கள். இதனுடைய பயனை அறிந்தால் இனிமேல் வீணாக தூக்கி எறிய மாட்டீர்கள்.

சில பாரம்பரிய முறைக்கும் தேங்காய் நார் பயன்படுத்தப்படுகிறது. அதில் சில 1. வயிற்றுப்போக்குக்கு நிவாரணம்:                                                                                                              இந்த முறையில் தேங்காய் நாரை நன்றாக சுத்தம் செய்து, அதன் உமியை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும். இந்த தண்ணீரை பருகுவதால் வயிற்றுப்போக்கு, வலி ஆகியவை குணமடையும். 2.மூட்டு வலியை போக்கும் தேங்காய் நார் தேநீர்: மூட்டுவலி மற்றும் உடல் வலியால் பாதிக்கப்பட்டவர்கள், மேல் கூறியது போல் தேங்காய் நார் தண்ணீர் குடிப்பது உங்கள் நிலையை மேம்படுத்த உதவும். தேங்காய் நாரில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் கீல்வாதத்தால் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவுகிறது.                         3.பாத்திரம் தேய்க்க உதவும்: தேங்காய் நார் பாத்திரங்களை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படுத்தலாம். நாரை மட்டும் பிரித்து, அத்துடன் கரி தூள் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பாத்திரம் தேய்க்கப் பயன்படுத்தலாம்.
4.கொசு விரட்டி: தேங்காய் நார் உடன் கற்பூரத்தை சேர்த்து எரிப்பது சமையலறை மற்றும் வீட்டிலிருந்து வரும் துர்நாற்றத்தை போக்கவும், கொசு விரட்டியாகவும் பயன்படுகிறது.