Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தலையில் பொடுகு படர்ந்துள்ளதா? இதற்கான காரணமும்.. உரிய தீர்வும் இதோ!!

அனைத்து பருவ காலங்களிலும் பொடுகு பாதிப்பு வருகிறது.தலையில் வெள்ளை நிறத்தில் படர்ந்து தலை அரிப்பு,முடி உதிர்வு போன்றவற்றை ஏற்படுத்துகிறது.பொடுகு பாதித்தவர் பயன்படுத்தும் டவல்,சீப் போன்றவற்றை பிறர் பயன்படுத்தும் பொழுது அவருக்கும் இந்த பிரச்சனை ஏற்படும்.

தலையில் அதிக பொடுகு இருந்தால் அடிக்கடி பிப்பு ஏற்படும்.எந்நேரமும் தலையை சொறியும் நிலை ஏற்படும்.இதனால் ஸ்கால்ப் சேதமடைந்து இரத்தம் வர வாய்ப்பிருக்கிறது.இந்த பொடுகுத் தொல்லை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் ஒரு கட்டத்தில் பொடுகுத் தொல்லையால் கடும் பாதிப்பினை சந்திக்கின்றனர்.

இந்த பொடுகுத் தொல்லையை சாதாரணமாக கருதி உரிய தீர்வு காணாவிட்டால் நிச்சயம் முடியின் சேதம் அதிகரித்துவிடும்.

பொடுகு ஏற்பட முக்கிய காரணம்:-

1)தலை வறட்சி

2)தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருத்தல்

3)மன அழுத்தம்

4)பருவநிலை மாற்றம்

5)மலச்சிக்கல்

6)சீப் மற்றும் டவலை சுத்தப்படுத்தாமல் பயன்படுத்துதல்

7)கெமிக்கல் ஷாம்பு பயன்பாடு

8)மோசமான உணவுப் பழக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை

பொடுகுத் தொல்லையை போக்கும் வீட்டு வைத்தியம்:

*கருஞ்சீரகம் – இரண்டு தேக்கரண்டி
*குப்பைமேனி இலை – கால் கைப்பிடி
*துளசி இலை – கால் கைப்பிடி
*வேப்பிலை – கால் கைப்பிடி

முதலில் கருஞ்சீரகத்தை வாணலியில் போட்டு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு குப்பைமேனி இலை,துளசி இலை மற்றும் வேப்பிலையை தண்ணீரில் சுத்தம் செய்து மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு கருஞ்சீரகத்தை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து இந்த பேஸ்ட்டில் போட்டு நன்கு மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

இந்த பேஸ்டை தலை முழுவதும் அப்ளை செய்ய வேண்டும்.குறிப்பாக ஸ்கால்ப்பில் படும்படி தடவி நன்கு ஊறவைக்க வேண்டும்.

பிறகு வெது வெதுப்பான நீர் கொண்டு தலை முடியை நன்கு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.இந்த முறையை தொடர்ந்து பின்பற்றி வந்தால் பொடுகுத் தொல்லையில் இருந்து முழுமையாக மீண்டுவிடலாம்.

மேலும் பொடுதலை என்ற மூலிகை நாட்டுமருந்து கடையில் கிடைக்கும்.இதை வாங்கி தலைக்கு பயன்படுத்தி வந்தால் பொடுகுத் தொல்லைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும்.

Exit mobile version