Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பொடுகு பிரச்சனையா? தலை முடி அதிகம் உதிர்கின்றதா? இதோ அதற்கான தீர்வுகள்! 

பொடுகு பிரச்சனையா? தலை முடி அதிகம் உதிர்கின்றதா? இதோ அதற்கான தீர்வுகள்!

ஆண், பெண் ஆகிய இருப்பாலரும் தலைமுடியை பேணுவதில் அதிக அக்கறை உண்டு. ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி தலைமுடியில் ஏதேனும் பிரச்சினைகள் வந்தால் அவற்றை ஆரம்பத்தில் சரி செய்வது நல்லது. இல்லையெனில் முடி உதிர்வு ஏற்பட்டு அவர்களின் அழகை குறைத்து விடும்.

இன்றைய காலகட்டங்களில் முடி உதிர்வுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. முடி உதிர்வு எண்ணிக்கை அதிகரித்து வழுக்கை விழ வாய்ப்புகள் நிறைய உள்ளன. பரம்பரை, சீரற்ற உணவு முறை, முடியை பராமரிக்காமல் விடுவது, வேதிப்பொருட்களை தலைமுடிக்கு அதிகம் உபயோகப்படுத்துவது, போன்ற காரணங்களால் முடி உதிர்வு ஏற்படுகிறது.

வீட்டில் தயாரிக்கப்படும் கீழ்க்கண்ட கலவையை வாரத்தில் இரண்டு நாட்கள் பயன்படுத்துவதன் மூலம் பொடுகு நீங்குவதோடு, தலைமுடி கொட்டும் பிரச்சனையும் தீரும்.

சுத்தமாக செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் இரண்டு ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். தேங்காய் எண்ணெய் பொடுகு பிரச்சனை தீர்ப்பதோடு தலைமுடிக்கு வலுவை கொடுக்கிறது. தேங்காய் எண்ணெயை தினமும் தடவி வந்தால் தலை முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் பெருமளவு குறையும்.

அடுத்து அரை மூடி எலுமிச்சை சாறை தேங்காய் எண்ணெயில் பிழிந்து விடவும்.

அடுத்து எடுத்துக் கொள்ளப் போகும் பொருள் தயிர். 2 ஸ்பூன் தயிர் எடுத்துக் கொள்ள வேண்டும் இவை மூன்றையும் நன்றாக கலக்க வேண்டும். தயிர் ஆனது தலைமுடிக்கு நல்லதொரு கண்டிஷனராக செயல்படுகிறது. இவை மூன்றையும் நன்றாக கலக்க வேண்டும். தலைமுடிக்கு மென்மையையும், பளபளப்பையும் தயிர் தருகிறது.

இந்த கலவையை குளிக்கப் போவதற்கு அரை மணி நேரம் முன்பு தலையில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதனால் மயிர் கால்களில் ரத்த ஓட்டம் அதிகரித்து முடி வளர்ச்சிக்கு உதவும். அரை மணி நேரம் கடந்ததும் சீயக்காய் தேய்த்து தலையை அலசவும். எலுமிச்சையும் தேங்காய் எண்ணெயும் ஒன்று சேரும்பொழுது கிடைக்கும் பலன்கள் ஏராளமானவை. இது பொடுகு பிரச்சனையை முற்றிலும் தீர்ப்பதோடு வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகிறது.

 

 

Exit mobile version