Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Dandruff Problem? தலையில் இருக்கின்ற பொடுகு ஐந்து நிமிடத்தில் வேரோடு நீங்க இதை மட்டும் செய்யுங்கள்!!

Dandruff Problem? Just do this to get rid of dandruff in five minutes!!

Dandruff Problem? Just do this to get rid of dandruff in five minutes!!

Dandruff Problem? தலையில் இருக்கின்ற பொடுகு ஐந்து நிமிடத்தில் வேரோடு நீங்க இதை மட்டும் செய்யுங்கள்!!

இன்று பெரும்பாலானோர் பொடுகு பாதிப்பால் அவதியடைந்து வருவதை பார்க்க முடிகிறது.ஊட்டச்சத்து குறைபாடு,முடி வறட்சி,காலநிலை மாற்றம் உள்ளிட்ட சில காரணங்களால் தலையில் பொடுகு உற்பத்தியாகிறது.

தலையில் பொடுகு இருந்தால் அரிப்பு,கெட்ட வாடை,முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.ஆகையால் பொடுகு பாதிப்பு இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும்.

1)புதினா
2)பேக்கிங் சோடா

ஒரு மிக்ஸி ஜாரில் கைப்பிடி அளவு புதினா இலைகளை சேர்த்து ரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.பிறகு அதில் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து கலந்து விடவும்.இந்த பேஸ்ட்டை தலை முழுவதும் அப்ளை செய்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு தலைக்கு குளிக்கவும்.இவ்வாறு செய்தால் தலையில் உள்ள முழுமையாக நீங்கும்.

1)வெள்ளரிக்காய்
2)பெரு நெல்லிக்காய்

ஒரு துண்டு வெள்ளரிக்காய் மற்றும் ஒரு பெரு நெல்லிக்காயை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.இதை தலை முழுவதும் அப்ளை செய்து 15 நிமிடங்களுக்கு பின்னர்
பின்னர் குளிர்ந்த நீர் பயன்படுத்தி தலைக்கு குளிக்கவும்.இவ்வாறு செய்தால் தலையில் உள்ள பொடுகு முழுமையாக நீங்கி விடும்.

1)வெந்தயம்
2)வேப்ப எண்ணெய்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 100 மில்லி சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி வெந்தயம் போட்டு மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த எண்ணெயை ஆறவிட்டு தலைக்கு அப்ளை செய்து வந்தால் பொடுகு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

1)துளசி
2)கற்றாழை
3)தயிர்

ஒரு கைப்பிடி அளவு துளசி மற்றும் ஒரு துண்டு கற்றாழை ஜெல்லை மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைக்கவும்.இந்த பேஸ்ட்டை தயிரில் கலந்து தலை முழுவதும் அப்ளை செய்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

1)இஞ்சி
2)பீட்ரூட்

ஒரு துண்டு பீட்ரூட் மற்றும் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.இந்த பேஸ்ட்டை தலை முழுவதும் அப்ளை செய்து குளித்து வந்தால் பொடுகு அடியோடு நீங்கும்.

1)தேங்காய் எண்ணெய்
2)வேப்ப எண்ணெய்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 100 மில்லி தேங்காய் எண்ணெய் மற்றும் 100 மில்லி வேப்ப எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும்.

இந்த எண்ணெயை ஆறவிட்டு தலைக்கு பயன்படுத்தி வந்தால் அரிப்பு,பொடுகு உள்ளிட்ட பாதிப்புகள் நீங்கும்.

1)எலுமிச்சை சாறு
2)தயிர்

1/4 கப் தயிரில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாற்றை பிழிந்து தலைக்கு அப்ளை செய்து குளித்து வந்தால் பொடுகு அடியோடு ஒழியும்.

Exit mobile version