பொடுகு பிரச்சனை நீங்கி அடர்த்தியாக வளர உடனடி தீர்வு!! 

0
122

பொடுகு பிரச்சனை நீங்கி அடர்த்தியாக வளர உடனடி தீர்வு!!

பொடுகு என்பது தலையில் உள்ள இறந்த செல்களின் படிவுகள் பொடுகு என்று அழைக்கப்படுகிறது. சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கும் ஏற்படக்கூடிய பிரச்சனையாகும். எண்ணை சருமம் இருப்பவர்களுக்கு தலையில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் தலையை சுத்தமாக வைத்துக் கொள்கிறது. ஆனாலும் பயன்படுத்தும் ஷாம்பு அல்லது அழகு சாதனப் பொருட்களாலும் பொடுகுயை ஏற்படுகிறது. இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே உடனடியாக சரி செய்து கொள்ள முடியும்.

போடுங்க நீங்குவதற்கு செய்ய வேண்டிய டிப்ஸ்கள்

1. நல்லெண்ணெயுடன் சம அளவு எலுமிச்சை சாறு எடுத்து நன்றாக கலந்து அதனை முடியின் வேர் கால்களில் நன்றாக தடவி வந்தால் பொடுகு பிரச்சனை குணமாகும். இதனை ஒரு வாரம் செய்து வருவதால் உடனடியாக பொடுகு பிரச்சினை விரைவில் சரியாகும்.

2. ஒரு கப் தயிர் எடுத்துக் கொண்டு அதனுடன் ஒரு ஸ்பூன் அளவு மிளகுத்தூள் சேர்த்து அதனை முடியும் வேர் கால்களில் நன்கு பூசி பத்து நிமிடங்கள் கழித்து தலையை கழுவி வந்தால் பொடுகு தொல்லை தீரும். ஆனால் மிளகுத்தூள் சேர்ப்பதால் குளிர்ச்சி ஏற்படாது உடல் உஷ்ணம் ஏற்படும்.

3. பொடுகு தொல்லை விரைவில் சரியாக வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊற வைத்து அந்த தண்ணீரை எடுத்து எலுமிச்சை சாறு பிழிந்து தலையில் நன்றாக மசாஜ் செய்து அதன்பின் ஷாம்பு போட்டு தலைக்கு குளிப்பதால் பொடுகு பிரச்சனை தீரும். இதனை வாரம் இரண்டு முறை செய்து வர வேண்டும்.

4. கிரீன் டீ சர்க்கரை கலக்காமல் வெறும் டீயை எடுத்துக்கொண்டு அதனுடன் துளசி இலைச் சாறு மற்றும் நெல்லி பொடியை சேர்த்து தலையில் போட்டு அரை மணி நேரம் ஊற வைத்த பின்னர் தலையை கழுவி வந்தால் பொடுகு பிரச்சனை உடனடியாக சரியாகும்.

5. பொடுகு தொல்லை தீர முட்டையின் வெள்ளை கரு நல்ல நல்ல பலனை தரும்.

6. எலுமிச்சை சாறுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக முடியின் வேர் கால்களில் தடவி அரை மணி நேரம் கழித்து ஷாம்பின் மூலம் கழுவி வருவதால் பொடுகு பிரச்சனை தீரும்.

7. கற்றாழையை எடுத்துக்கொண்டு அதனை நன்றாக அரைத்து அதனை தலை முழுவதும் ஊற வைத்த பின் பின் முடியை கழுவி வந்தால் பொடுகு பிரச்சனை உடனடியாக தீரும்.

முடி உதிர்வு பிரச்சனைக்கு முக்கிய காரணம் பொடுகு தொல்லையாக இருக்கிறது. பொடுகு தொல்லை இருப்பவர்களுக்கு முடி கொத்துக் கொத்தாக உதிரும் இதற்குக் காரணம் பொடுகு பிரச்சனை. இதனால் பொடுகு பிரச்சனையே அப்படியே விட்டு விடாமல் உடனடியாக தீர்வு காண வேண்டும். மேலே உள்ள தகவல்களை பயன்படுத்தி பொடுகு பிரச்சனையிலிருந்து உடனடியாக நீங்கள் குணமடையலாம்.