இந்த வருடம் ஒரு மோசமான வருடம் என்று மக்கள் கூறிவரும் நிலையில், மேலும் ஒரு பெரிய அபாயம் , இந்தியாவிற்கு வர இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
கொரோனாவால் கல்லூரி, தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் மிகப்பெரிய இழப்பை சந்தித்து வருகின்றனர். இதனால் இந்தியா பல ஆண்டுக்கு பின்னால் சென்று உள்ளதாக சமீபத்தில் நடந்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருந்தது.
இதனைத் தொடர்ந்து ,சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் விரைவில் இந்தியாவின் கிரீடம் என்று அழைக்கப்படும் இமயமலைப் பகுதி முழுவதிலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . இமயமலை பகுதியானது இந்தியாவின் கிழக்கிலிருந்து பாகிஸ்தான் மேற்கு பகுதி வரை பரவியுள்ளது. இமயமலைப் பகுதி வடக்கிலிருந்து வரும் குளிர்காற்றில் காப்பதோடு மட்டுமல்லாமல், எதிரி நாட்டுக்குள் நுழைவதை தடுக்கும் ஒரு பாதுகாப்பு அரணாகவும் அமைந்துள்ளது. இப்படி சிறப்பு பெற்ற இமயமலைப் பகுதி விரைவில் நிலநடுக்கம் ஏற்பட்டு முழுவதும் அழியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
புவியியல் வரலாற்று மற்றும் புவி இயற்பியல் உள்ளிட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் பயங்கர நிலநடுக்கம் முன்கூட்டியே அறிவிக்கும் ரேடியோ கார்பன் பகுப்பாய்வை தொடர்ந்து நில அதிர்வு ஆராய்ச்சி அமைப்பு, பாறை மேற்பரப்பிலும் மண்ணை வைத்து ஆராய்ச்சி நடத்தியதில் நிகழக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இதனால் பெரிய பூகம்பங்கள் மையமாக தற்பொழுது இமயமலை அமைந்துள்ளதாகவும் , இந்த அழிவில் சட்டீஸ்கர், நேபால் ,காட்மண்டு போன்ற பெரிய நகரங்கள் முற்றிலும் அறிய வாய்ப்பிருப்பதாகவும் ஆராய்ச்சியில் தெரிவிக்கின்றனர்.