Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

12 மாவட்டங்களில் இதனால் ஆபத்து! பேரிடர் மேலாண் கழகம் வெளியிட்ட திடீர்  அறிவிப்பு! 

#image_title

12 மாவட்டங்களில் இதனால் ஆபத்து! பேரிடர் மேலாண் கழகம் வெளியிட்ட திடீர்  அறிவிப்பு! 

காஷ்மீரில் 24 மணி நேரத்தில் பனிச்சரிவு ஏற்படும் மாவட்டங்கள் பற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் அதிக பனிப்பொழிவால் 12 மாவட்டங்களுக்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் அதிக பனிப்பொழிவு உள்ளது. இங்கு அடிக்கடி பனிச்சரிவு ஏற்பட கூடிய பகுதிகள் உள்ளன. இதனால், சாலைகளில் பனி படர்ந்து போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுத்தி உள்ளது.

காஷ்மீர் பகுதியில் சில நாட்களாகவே  கடும் பனிப்பொழிவு காணப்படுகின்றது. ஆங்காங்கே பனிச்சரிவும் ஏற்படுகின்றது. இமயமலையில் அமைந்த காஷ்மீரில் நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, குளிர்காலத்தில் வெப்பநிலையும் மிகவும் குறைந்து காணப்படும்.

இந்த நிலையில், காஷ்மீரில் அடுத்த 24 மணிநேரத்தில் பனிச்சரிவு ஆபத்து ஏற்பட கூடிய மாவட்டங்கள் பற்றிய அறிவிப்பை ஜம்மு மற்றும் காஷ்மீரின் பேரிடர் மேலாண் கழகம் வெளியிட்டு உள்ளது.அதுகுறித்த செய்தியில்,

நடுத்தர மட்டத்தில்  ஆபத்து ஏற்படுத்த கூடிய பனிச்சரிவானது அனந்த்நாக்,  தோடா,பாராமுல்லா, கந்தர்பால், குப்வாரா, குல்காம், பந்திப்பூர் கிஷ்த்வார் மற்றும் பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில் சுமார் 2000  முதல் 2,500 மீட்டர் உயரத்தில் ஏற்பட கூடும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

இதேபோல் ஆபத்து ஏற்படுத்தக்கூடிய குறைந்த மட்டத்திலான பனி சரிவானது ரியாஸி, ரஜோர் மற்றும் ராம்பன்  மாவட்டங்களில் 2000 முதல் 2500 மீட்டர் உயரத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version