நமது உள்ளுறுப்புகளில் ஒன்றான நுரையீரல் நாம் சுவாசிக்க உதவுகிறது.நுரையீரலில் சளி போன்ற கழிவுகள் தேங்கி இருந்தால் சுவாசிப்பதில் கடும் சிரமத்தை சந்திக்க கூடும்.சிலருக்கு சுவாசப் பாதையில் கிருமி தொற்றுகள் இருந்தால் சுவாசிக்க சிரமப்படுவார்கள்.
சளி,ஆஸ்துமா,புகைப்படுத்தல் போன்ற காரணங்களால் நுரையீரல் பழுதடைந்துவிடுகிறது.எனவே இதுபோன்ற நுரையீரல் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் உணவுமுறை பழக்கத்தில் அதீத கவனம் செலுத்த வேண்டியது முக்கியமாகும்.
நுரையீரல் சம்மந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:
1)பால் மற்றும் பால் பொருட்கள்
சுவாசக் கோளாறு இருப்பவர்கள் பால் சார்ந்த பொருட்களை தவிர்க்க வேண்டியது அவசியம்.பால் பொருட்களை உட்கொண்டால் சுவாசிப்பது கடிமனாகிவிடும்.நுரையீரல் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடிய பொருள் பால் இல்லை என்றாலும் அவை சுவாசக் கோளாறை உண்டாக்கிவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
2)அதிக உப்பு சேர்க்கப்பட்ட உணவுகள்
நுரையீரல் சம்மந்தப்பட்ட பாதிப்பு இருப்பவர்கள் சோடியம் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொண்டால் மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்படும்.
3)குளிர்பானங்கள்
சோடா போன்ற குளிர்பானங்களை அதிகமாக பருகினால் நுரையீரல் ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கம் ஏற்படும்.சோடாவில் கார்பன் டை ஆக்ஸைடு அதிகமாக நிறைந்திருக்கிறது.இந்த சோடா பானத்தை அதிகமாக பருகினால் நுரையீரல் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும்.
4)சாக்லேட்
அனைவரும் விரும்பி சாப்பிடும் சாக்லேட் நுரையீரல் சம்மந்தபட்ட பிரச்சனைகளை அதிகமாக்கிவிடும்.இவை ஆரோக்கியத்திற்கு உகந்தவை அல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
5)பிரை உணவுகள்
வறுத்த உணவுகளை அதிகமாக உட்கொண்டால் நுரையீரல் சம்மந்தபட்ட பாதிப்புகள் ஏற்படும்.வறுத்த உணவுகள் நுரையீரல் நோய்களை அதிகரித்துவிடும்.
6)மது
பீர்,பிராந்தி போன்ற மது பானங்களை அதிகமாக எடுத்துக் கொண்டால் நுரையீரல் ஆரோக்கியம் முழுமையாக சேதமடைந்துவிடும்.குடிப்பழக்கம் அதிகமானால் நுரையீரல் பலவீனமடைந்து செயலிழந்துவிடும்.அதேபோல் புகைபிடிக்கும் பழக்கம் அதிகமாக இருந்தால் நுரையீரல் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.
நுரையீரல் ஆரோக்கியத்திற்கு உகந்த உணவுகள்:
ஆப்பிள்,தக்காளி,பச்சை காய்கறி இலைகள்,பூசணி,பீட்ரூட் போன்றவை நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய உணவுகளாகும்.