Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாஜக கட்சியால் மற்ற மாநிலங்களுக்கு ஆபத்து! காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் அறிவிப்பு!!

#image_title

பாஜக கட்சியால் மற்ற மாநிலங்களுக்கு ஆபத்து! காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் அறிவிப்பு.
ஆளும் பாரதிய ஜனதா கட்சியால் அண்டை மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சிதம்பரம் அவர்கள் அறிவித்துள்ளார். கர்நாடாகத் தேர்தலை முன்னிட்டு அவர் இதை அறிவித்துள்ளார்.
வரும் மே 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் கார்நாடக மாநிலத்தின் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிகழ்ந்து வருகின்றது. கர்நாடக மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற இரண்டு கட்களும் முயன்று வருககறது. இதனிடையே இன்று மாலையுடன் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பரப்புரை முடிவடையவுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சிதம்பரம் அவர்கள் பாஜக கட்சியால் அண்டை மாநிலங்களுக்கு ஆபத்து இருக்கின்றது என்று அவர் கூறியுள்ளார்.
காங்கியஸ் கட்சித் தலைவர் சிதம்பரம் அவர்கள் கர்நாடக மாநில தேர்தல் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் எதிர்கால நலனுக்காக கர்நாடகத்தில் நடைபெற இருக்கும் தேர்தலில் பாஜக வெற்றி பெறாமல் தடுக்க வேண்டும் என்று கூறிய சிதம்பரம் அவர்கள் “நடக்கவுள்ள கர்நாடக மாநிலத் தேர்தலில் பாஜக கட்சியை தோற்கடிக்க வேண்டும். இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் அண்டை மாநிலங்களிலும் பாஜக கட்சி தங்களின் ஆட்சியை ஏற்படுத்த திட்டம் தீட்டும். பாஜக கட்சியின் ஆட்சியிலிருந்து மக்கள் எவ்வளவு வேகமாக விழித்துக் கொள்கிறார்களோ அந்த அளவுக்கு நாட்டுக்கு நல்லது” என்று கூறியுள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் அதிமுக கட்சியுடன் பாஜக கட்சி கூட்டணி அமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Exit mobile version