உடலில் பித்தத்தினால் ஏற்படும் ஆபத்தான விளைவுகள்:? பித்தத்தை சரி செய்யும் எளிய வழிமுறைகள்!

0
316

உடலில் பித்தத்தினால் ஏற்படும் ஆபத்தான விளைவுகள்:? பித்தத்தை சரி செய்யும் எளிய வழிமுறைகள்

உடலில் பித்தநீர் அதிகரிப்பதால் நம் உடலிருக்கு பலவித மோசமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.பித்தம் அதிகரிப்பதால் நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்?பித்தம் அதிகரிப்பதற்கான காரணங்கள்? பித்தத்தை எழுமையாக குறைக்கும் எளிய வழிமுறைகளை பற்றி இதில் காண்போம்.

பித்தம் அதிகரிப்பதால் நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்?

* கை கால் மற்றும் உதடுகளின் சருமங்கள் வெடிப்பு

*அடிக்கடி தலை சுற்றுதல்

*வாந்தி,மயக்கம்,மலச்சிக்கல்

* இளநரை,உடல் சூடு,வாய் கசப்பாக இருத்தல்

* காலை எழுந்தவுடன் மஞ்சள் நிறத்தில் வாந்தி வருவது

* வாயுத் தொல்லை ஏற்படும்.

பித்தநீர் அதிகரிப்பதற்கான காரணம்?

* நம் உடலிற்கு தேவையான போதிய அளவில் நீர் குடிக்காமல் இருந்தால் நம் உடலில் பித்தம் அதிகரிக்கும்.

* இரவில் அதிக நேரம் கண் விழித்தால் நம் உடலில் பித்தம் அதிகரிக்கும்.

* காரமான அல்லது புளிப்பான உணவை அதிகம் எடுத்துக் கொண்டால் உடலில் உள்ள பித்தத்தை அதிகரிக்கும்.

* டீ காபி போன்ற தேனீர் வகைகளை அதிகம் குடிப்பதால் உடலில் பித்தநீர் பல மடங்கு அதிகரிக்கும்.

உடலில் உள்ள பித்த நீரை குறைக்கும் எளிய வழிகள்

வழிமுறை:1

தேவையான பொருட்கள்

சீரகம், சுக்கு,கொத்தமல்லி,தேன்
அல்லது பனங்கற்கண்டு

செய்முறை

சுக்கு சீரகம் கொத்தமல்லி ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்து மிதமான சூட்டில் வறுத்து நன்றாக பொடி செய்து கொள்ள வேண்டும்.பிறகு இந்த பொடியை ஒரு டீஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீருடன் நன்றாக கொதிக்கவைத்து வடிகட்டிவிட வேண்டும்.பின்பு மிதமான சூட்டில் தேன் அல்லது பணங்கற்கண்டு கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் உள்ள பித்தம் விரைவில் குறைந்துவிடும்.

வழிமுறை 2

சின்ன வெங்காயத்துடன் தயிர் கலந்து ஊறவைத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பித்தம் எளிதில் குறைவதோடு உடலின் சர்க்கரையை கட்டுக்குள் வைத்துக்கொள்ளும்.

வழிமுறை 3

சிறிதளவு கறிவேப்பிலையை எடுத்து நிழலில் உலர்த்தி,பொடிசெய்து இந்தப் பொடியை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து பின்பு மிதமான சூட்டில் தேன் கலந்து குடித்து வந்தால் இரவில் பித்தம் குறையும்.