பெற்றோர்கள் கவனத்திற்கு பிஸ்கட் உடலுக்கு மிகவும் கெடுதல்!! பிஸ்கட்டால் ஏற்படும் பாதிப்புகள்!!

0
148

பெற்றோர்கள் கவனத்திற்கு பிஸ்கட் உடலுக்கு மிகவும் கெடுதல்!! பிஸ்கட்டால் ஏற்படும் பாதிப்புகள்!!

கிரீம் பிஸ்கெட்களை, மற்றவர்களுடன் பிஸ்கட்டுகளுடன் ஒப்பிட்டு பார்த்தால் அது மிகவும் ஆபத்தானது ஆகும். மேலும், அதில் சேர்க்கப்படும் ஃபிளேவர்கள் மற்றும் நிறங்கள் ஆகியன முழுக்க முழுக்க ரசாயனங்களால் ஆனது. இதன் காரணமாக அதனை குழந்தைகளுக்கு அதனை கொடுக்க கூடாது.

உப்பு சேர்க்கப்படும் பொருட்களில் சோடியம் கார்பனேட், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். மேலும் அதனை தொடர்ந்து அளவுக்கு அதிகமான உப்பு சுவை கொண்ட பிஸ்கட்டுகள் சாப்பிடும் போது குழந்தைகளுக்கு சிறுநீர் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

இதனை உண்டு வந்தால் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை அதிகம் ஏற்படும் .மேலும் குழந்தைகளுக்கு பாலுடன் இரண்டு பிஸ்கட்டுகள் சாப்பிடும்போது உடலில் கொழுப்புச் சத்து அதிகரித்து குழந்தைகள் மந்த நிலையுடன் செயல்படத் தொடங்குவார்கள்.

மேலும் இதன் காரணமாக செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம். அதிகளவு சுகர் ப்ரி சர்க்கரைகள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அனைவருடைய உடம்பிலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யும் தன்மையுடையது.

மேலும் சில பிஸ்கட்டுகளில் சுகர்ஃபிரி என குறிப்பிடப்பட்டு இருக்கும். ஆனால் அதில் சுகர்பிரி சர்க்கரை சேர்த்திருக்க மாட்டார்கள். அதன் சுவைக்காக சுகர் பிரீ மாத்திரைகள் மற்றும் சோள மாவு அல்லது சுகர்ப்ரி பவுடர் போன்றவை சேர்க்கப்பட்டிருப்பதால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். குழந்தைகளுக்கு எப்போதும் உணவு அல்லது இயற்கை உணவுகளை சாப்பிடக் கொடுத்தல் வேண்டும்.

தற்போதைய காலத்தில் பிஸ்கட் கூட உடம்புக்கு மிகவும் கெடுதல்.எனவே குழந்தைகளின் நலன் கருதி பிஸ்கட் கூட இனி அதிகம் கொடுக்காதிருப்பது அவசியம்.