Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தர்பார் போராட்டம், பாரதிராஜா குரல், விநியோகிஸ்தர்களுடன் சந்திப்பு: என்ன ஒரு ஒற்றுமை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் நஷ்டம் என ஒரு சில விநியோகஸ்தர்கள் நடத்திய போராட்டம், போராட்டம் நடத்தப்பட்ட அடுத்த நாளே பாரதிராஜா ரஜினி மீது விமர்சனம் செய்து எழுப்பிய குரல், அதன்பின் தர்பார் விநியோகஸ்தர்கள் பாரதிராஜாவுடன் சந்திப்பு என இந்த மூன்றையும் இணைத்து ரஜினி ரசிகர்கள் ஒரு சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர்

தர்பார் திரைப்படம் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் நல்ல லாபத்தைக் கொடுத்த நிலையில் வேண்டுமென்றே ஒரு சில விநியோகஸ்தர்கள் இந்த படம் நஷ்டம் அடைந்ததாக ஆதாரமில்லாமல் குற்றஞ்சாட்டை கூறி வருவதாக ஏற்கனவே ரஜினி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்

இந்த நிலையில் திடீரென பாரதிராஜா ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது ’ரஜினியை முதல்வராக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தார். தர்பார் விநியோகஸ்தர்கள்களின் போராட்டம், பாரதிராஜாவின் எதிர்ப்புக் குரலை அடுத்து தர்பார் விநியோகஸ்தர்கள் பாரதிராஜாவை இன்று சந்தித்து உள்ளதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது குறித்த சந்தேகத்தை ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளம் மூலம் கிளப்பி வருகின்றனர்

திமுகவுக்கு தேர்தல் பணி செய்யும் பிரசாந்த் கிஷோர் போட்ட திட்டம்தான் இது என்று ஒரு சில ரஜினி ரசிகர்கள் தெரிவித்து வந்தாலும் இது உண்மையா? என்பதை போகப்போகத்தான் பார்க்க வேண்டும்

Exit mobile version