Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தர்பார் படம் நஷ்டம்:யாரைக் கேட்பது?குழப்பத்தில் விநியோகஸ்தர்கள்!

தர்பார் படம் நஷ்டம்:யாரைக் கேட்பது?குழப்பத்தில் விநியோகஸ்தர்கள்!

ரஜினியின் தர்பார் படத்தின் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தை யாரிடம் கேட்டுப் பெறுவது என்ற குழப்பத்தில் விநியோகஸ்தர்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

பெரிய நடிகர்கள் படங்கள் ரிலிஸாகும் அதை அதிக விலைக்கு வாங்கி அதிக டிக்கெட் கட்டணத்தில் விற்று அதிக லாபம் பார்க்கலாம் என விநியோகஸ்தர்கள் கணக்குப் போட்டு கையை சுட்டுக் கொள்வது வாடிக்கையாகி உள்ளது. இந்த நிலை இப்போது தர்பார் படத்துக்கு வருமோ என்ற சூழல் உருவாகியுள்ளது.

பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான தர்பார் முதல் நாளிலேயே எதிர்மறை விமர்சனங்கள் பெற்றதால் கூட்டம் குறைய ஆரம்பித்தது. முதல் நாளின் மாலை மற்றும் இரவு காட்சிகளில் டிக்கெட்கள் சர்வ சாதாரணமாகக் கிடைக்க ஆரம்பித்தது. இதனால் முதல்நாள் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என சொல்லப்படுகிறது. இத்தனைக்கும் சிற்ப்புக்காட்சியின் டிக்கெட் விலை 1000 ரூபாயில் இருந்து 3000 ரூபாய் வரை விற்கப்பட்டது. இது அனுமதிக்க பட்ட விலையை பல மடங்கு அதிகமாகும்.

இப்போது பெரும்பாலான தியேட்டர்களில் இருந்து தர்பார் படம் தூக்கப்பட்ட நிலையில் கணக்கு பார்த்தால் விநியோகஸ்தர்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனைத் தங்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் விநியோகஸ்தர்கள் அனைவரும் கூட்டம் போட்டு நஷ்ட ஈடு பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.

ஆனால் நஷ்ட ஈட்டை யாரிடம் கேட்பது என்ற குழப்பம் அவர்களுக்குள் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. வழக்கமாக ரஜினி படங்களை அதிக விலைக்கு வாங்கி நஷ்டப்பட்டால் அதை ரஜினிதான் ஈடு கட்டுவார். அதனால் அவரிடம் முறையிடலாமா?அல்லது தயாரிப்பு நிறுவனமான லைகாவிடம் முறையிடலாமா?என கையைப் பிசைந்து வருகின்றனர். ஏற்கனவே லைகாவுக்கு தர்பார் மூலம் 40 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் விநியோகஸ்தர்களின் கோரிக்கையை ஏற்க மாட்டார்கள் என சொல்லப்படுகிறது. விநியோகஸ்தர்களுக்காக மனம் இறங்கி வருவாரா?… 100 கோடி சம்பளம் வாங்கிய ரஜினி ?

Exit mobile version