ஓணம் பண்டிகையை முன்னிட்டு தர்பார் படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

Photo of author

By Parthipan K

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தர்பார் படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியிடப்படுகிறது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வரும் படம் தான் இந்த தர்பார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அடுத்த படமான தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி ரசிகர்களை அசர வைத்தது. அந்த போஸ்டரை பார்த்தே கதை இதுவாக இருக்குமோ, அதுவாக இருக்குமோ என்று பலரும் பேசி கொண்டிருக்கிறார்கள். 

இந்நிலையில் ஓனம் பண்டிகையையொட்டி இன்று மாலை 6 மணிக்கு தர்பார் படத்தின் செகண்ட் லுக் வெளியிடப்படும் என்று அப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த நல்ல நாளில் சர்பிரைஸுக்கு தயாராகுங்கள் என்று கூறி தர்பார் படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் ட்வீட் செய்துள்ளது. இந்த அறிவிப்பை பார்த்த ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

போஸ்டர் எப்படி இருக்க வேண்டும்,உடனே 6 மணி வரக் கூடாதா, இதற்காக மாலை வரை காத்திருக்க வேண்டுமா என்றெல்லாம் ரஜினிகாந்த் ரசிகர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். தர்பார் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. கதை குறித்து அவ்வப்போது ஏதாவது தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் முருகதாஸ் இது பற்றி எதையுமே உறுதி செய்யவில்லை.

நான் பேச மாட்டேன், படம் பேசும் என்பது போல முருகதாஸ் தன் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறார். தர்பார் செகண்ட் லுக்கை லைகா வெளியிடும் முன்பு கருப்பு ஆடு யாராவது ஆன்லைனில் கசியவிட்டுவிடக் கூடாது என்று ரஜினி ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

ரஜினிகாந்த் நடிக்கும் இந்த தர்பார் பட வேலைகள் துவங்கியதில் இருந்தே இந்த படத்தின் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவை தொடர்ந்து கசிந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Exit mobile version