Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம்! அதை மறைய வைக்க இப்படி பண்ணுங்க!

#image_title

கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம்! அதை மறைய வைக்க இப்படி பண்ணுங்க!

நம்மில் பலருக்கும் கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்கும். இந்த கருவளையத்தை மறைய வைக்க இந்த பதிவில் அருமையான சில வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

நம்முடைய கண்களுக்கு கீழ் வரும் கருவளையம் என்பது அனைவருக்கும் சாதாரணமாக ஏற்படுவது தான். இந்த கருவளையம் இரவு நேரம் அதிக நேரம் தூங்காமல் செல் போன் பயன்படுத்துவதாலும், தூக்கமின்மை பிரச்சனை இருப்பதாலும் ஏற்படும்.

மேலும் உடலில் ஊட்டச்சத்துக்கள் குறைந்தாலும் வெயிலில் அதிகம் வெளியே சென்றாலும் கருவளையம் என்பது ஏற்படும். இந்த கருவளையத்தை போக்கி முகத்தை பொலிவாகவும், சருமத்தை ஆரோக்கியமாகவும் மாற்றும் வழிமுறை பற்றி பார்க்கலாம்.

கருவளையத்தை போக்கும் வழிமுறை…

* கண்களுக்கு கீழ் உள்ள கருவளையத்தை மறைய வைக்க முதலில் உருளைக் கிழங்கை எடுத்து தோல் நீக்கி அதை அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதிலிருந்து உருளைக் கிழக்கின் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு காட்டன் துணி எடுத்து அந்த உருளைக் கிழங்கு சாற்றை தொட்டு கண்களுக்கு கீழ் கருவளையம் உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் கருவளையம் மறையத் தொடங்கும்.

* இதைத் தொடர்ந்து குளிர வைத்த பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதை ஒரு காட்டன் துணி கொண்டு தொட்டு அதை கருவளையம் உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும்.

* பத்து நிமிடம் அப்படியே விட்டு விட வேண்டும். பத்து நிமிடம் கழிந்து குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் கண்களை சுற்றி உள்ள கருவளையம் மறைந்து முகம் பொலிவாக மாறும்.

Exit mobile version