Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தார்க் கலவை தரமில்லை…  மீண்டும் சாலையை போடுங்கள்!! ஒப்பந்தராரருக்கு மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவு!!

#image_title

தார்க் கலவை தரமில்லை…  மீண்டும் சாலையை போடுங்கள்!! ஒப்பந்தராரருக்கு மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவு!!

சென்னை மாநகராட்சியில் சாலை அமைக்கும் பணிகளை கண்காணிக்க ஆணையாளர் தலைமையில், பணிகள் பிரிவு இணை ஆணையாளர், வட்டார துணை ஆணையாளர்கள், தலைமைப் பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்கள் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு இரவு நேரங்களில் சாலைப் பணிகள் நடைபெறும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த 29-ம் வளசரவாக்கம் மாருதி நகர், முதல் பிரதான சாலையில் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது திடீரென ஆய்வுக்கு குழுவினர் நேரில் வந்து பணிக ளைபார்வையிட்டும் தரப்பரிசோதனைகளையும் மேற்கொண்டனர்.

ஆய்வில் சாலையில் கொட்டப்பட்ட தார்க்கலவையின் வெப்பநிலையை சரிபார்த்த பொழுது, 140 டிகிரி செல்சியஸ் முதல் 160 டிகிரி செல்சியஸ் வரை இருக்க வேண்டிய தார்க்கலவையின் வெப்பநிலை 115 டிகிரி செல்சியஸ் அளவில் மட்டுமே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், லாரியில் இருந்து கொட்டப்படாமல் இருந்த தார்க்கலவைகளை ஆய்வு செய்த போது 105 டிகிரி செல்சியஸ், 110 டிகிரி செல்சியஸ், 94 டிகிரி செல்சியஸ் என தார்க்கலவையில் வேறுபாடு காணப்பட்டது. எனவே, இந்தத் தார்க்கலவை சாலை அமைப்பதற்கு ஏற்ற தரத்தில் இல்லை என திருப்பி அனுப்பப்பட்டன.

மேலும், புதிதாக அமைக்கப்பட்ட தார்சாலையை முழுவதுமாக அப்புறப்படுத்திவிட்டு, மீண்டும் தார்சாலை அமைக்கவும் ஒப்பந்ததாரருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

Exit mobile version