Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெண்களின் அந்தரங்க பகுதியில் கருமையா?? அப்போ இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!! 

பெண்களின் அந்தரங்க பகுதியில் கருமையா?? அப்போ இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!!

பெண்கள் பொதுவாக வெளியே தெரியும் முகம், கை மற்றும் கால்பகுதிகளை அழகுப்படுத்துவதற்காக தரும் முக்கியத்துவத்தை தங்களது அந்தரங்கப்பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்ள தருவதில்லை. அந்தரங்கப்பகுதிகளில் உள்ள கருமைகளை அசால்ட்டாக நினைத்துவிட கூடாது. அதனை அப்படியே விட்டுவிட்டால் நாளைடைவில் அதற்கென தனியாக மருத்துவ சிகிச்சை தரவேண்டியிருக்கும். இந்த பகுதியில் பெண்களின் அந்தரங்கப்பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்ள சில வீட்டு வைத்திய குறிப்புகள் தரப்பட்டுள்ளன.

1.கற்றாளை:

கற்றாளை தோல் அலர்ஜியை நீக்கி, சருமத்தில் பூஞ்சைகள் தாக்குதல் இல்லாமல் சருமத்தை பாதுகாக்கிறது. இது சருமத்தில் உள்ள கருமையை போக்கவும் உதவுகிறது.

 

செய்முறை கற்றாளை ஜெல்லை எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் அதனை கழுவி விட வேண்டும். நீங்கள் கற்றாளை ஜெல்லை கடைகளில் வாங்கலாம் அல்லது வீட்டிலேயே எடுத்து குளிர்ச்சாதன பெட்டியில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளலாம்.

2.சோயா மற்றும் பேக்கிங் சோடா பேக்கிங் சோடா:

அனைத்து வீடுகளின் சமையல் அறைகளிலும் காணப்படும் ஒரு பொருள். இது அழகினை பாதுகாப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. சோயா பீன்ஸ்களில் அதிகளவு புரோட்டின் அடங்கியுள்ளது. இது சருமத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

 

செய்முறை : பேக்கிங் சோடா மற்றும் சோயாவை பேஸ்ட் போல செய்து, கருமையான இடங்களில் ஸ்கிரப் போல பயன்படுத்த வேண்டும். இதனை 5 நிமிடங்கள் விட்டுவிட்டு பின்னர் கழுவி விட வேண்டும்.

 

3.பப்பாளி:

அனைத்து சீசனிலும் கிடைக்கும் ஒரு பழம். இது விலை மளிவானதும் கூட.

இது சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இறந்த செல்களை நீக்கவும் உதவியாக இருக்கிறது. இதில் என்சைம் உள்ளது. மேலும் சிட்ரஸ் பழங்களில் விட்டமின் சி அதிகமாக உள்ளது. இது தோல் அரிப்பு, அலர்ஜி, ராஷ்கள் போன்றவற்றிற்கு தீர்வாக அமைகிறது. இது சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கவும் உதவியாக இருக்கிறது.

 

செய்முறை பப்பாளி மற்றும் எலுமிச்சை சாறு இரண்டையும் நன்றாக கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் பேஸ்ட் போல போட வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து இதனை கழுவி விட வேண்டும். மேல் சொன்ன குறிப்புகளை பயன்படுத்தி தீர்வு காணலாம்.

Exit mobile version