3 நாளில் தொடை இடுக்குகளில் உள்ள கருமை நீங்கிவிடும்!!

0
402
#image_title

3 நாளில் தொடை இடுக்குகளில் உள்ள கருமை நீங்கிவிடும்!!

வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டே தொடை இடுக்குகளில் இருக்கும் கருமையை போக்கிவிடலாம். தேங்காய் எண்ணெய், எலுமிச்சை : எலுமிச்சைப் பழத்தின் பாதியை எடுத்து, ஜூஸாக பிழிந்து கொள்ளுங்கள். அதனுடன் ஒரு கப் தேங்காய் எண்ணெய்யை எடுத்து கலக்கி, தொடை இடுக்குகளில் கருப்பாக இருக்கும் பகுதிகளில் அப்ளை செய்யுங்கள். இவ்வாறு செய்கையில் கருமை நீங்கும். இது போன்ற வேறு பொருட்களைக் கொண்டு எப்படி சரி செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

கை, கால், முகங்களில் உள்ள கருமையை போக்க நிறைய அக்கறை எடுத்துக் கொள்வோம். ஆனால் உள் தொடையில் உண்டாகும் கருமை நிறத் தை சட்டென்று பார்ப்பதில்லை என்பதோடு அதைக் கண்டாலும் பெரிதுபடுத்துவதும் இல்லை. அதைப் பராமரிப்பதும் இல்லை. சற்று தீவிரமாகும் போது அந்த இடத்தில் சொரசொரப்பையும் உண்டாக்கி எரிச்சலை ஏற்படுத்தும்.

குளிர்ச்சி தரக்கூடியது கற்றாழை.
இரண்டு கால்கள் உராய்வதால் ஏற்படும் கருமையை நீக்க சிறந்த வீட்டு வைத்தியம் இது.
சருமத்தை மிருதுவாக்கும்.
கருமை படிந்திருப்பதை நீக்கும்.
கற்றாழையின் தோலை நீக்கி, சதைப்பகுதியை நன்கு பேஸ்டாக்கி, அதை தொடைப் பகுதியில் தடவுங்கள்.
20 நிமிடங்கள் கழித்து இளஞ்சூடான நீரில் கழுவுங்கள். இவ்வாறு செய்கையில் தொடை பகுதிகளில் உள்ள கருமை நீங்கும்.

ஆரஞ்சு தோலை சேகரித்து வைத்து, அதை வெயிலில் காய வைத்து பொடியாக்கி பவுடராக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
சருமத்துக்கு நல்ல பொழிவு தரும்.
தேவையான அளவு ஆரஞ்சு தோல் பவுடரை எடுத்து, சிறிதளவு தேனுடன் கலந்து தொடையில் தடவுங்கள்.
20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். வாரம் 2-3 முறையாவது இந்த சிகிச்சையை செய்ய வேண்டும்.