எப்பொழுதும் பண்டிகை நாட்களில் பொதுவாக வீட்டில் நாம் தினமும் செய்யும் சமையலை விட ஸ்பெஷலாக ஏதாவது செய்ய வேண்டியது அதிகமாக இருக்கும். ஆனால், குடும்பத்துடன் நேரத்தை செலவழிப்பது குறைந்துவிடும். இதன் காரணமாக சமையல் செய்பவர்கள் எப்பொழுதும் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியவில்லை என்று நினைத்து ஏங்கிக் கொண்டிருப்பார்கள்.
இதைத் தவிர்ப்பதற்கு ஒரு சூப்பரான ரெசிபி உள்ளது. நீங்கள் நீண்ட நேரம் அடுப்பிலிருந்து வேலை செய்தால் வியர்த்துக் கொட்டி உங்களுக்கு அது தொல்லை இயக்கும். ஆனால், இந்த ரெசிபியை நீங்கள் வெறும் 30 நிமிடங்களில் எளிமையாக செய்யலாம். இதன் மூலமாக குடும்பத்தினருடன் செலவிட முடியும்.
மேலும், உணவு சமைத்த படியும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு உணவை தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம். பேரிச்சம்பழம் பர்பி எவ்வாறு செய்வது? அதனை பற்றி தற்போது காண்போம்.
தேவையான பொருட்கள்:
பேரிச்சம் பழம் -400 கிராம் கசகசா -20 கிராம்
பாதாம் -50 கிராம்
முந்திரி -50 கிராம்
உலர் திராட்சை -50 கிராம் தேங்காய் துருவல் -25 கிராம்
ஏலக்காய் -அரை டீஸ்பூன் நெய் -75 கிராம்
செய்முறை :
முதலில் பேரீச்சம் பழத்தை அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் கசகசா விதைகளை தனியாக வறுத்து வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் நெய்யில் திராட்சை, முந்திரி மற்றும் பாதாம் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். அதனை அடுத்து தேங்காய் மற்றும் ஏலக்காய் சேர்க்க வேண்டும்.
பின் பேரிச்சம்பழம் சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்கள் நன்றாக வறுத்துக் கொள்ளவும். அதே சூட்டுடன் ஒரு தட்டில் போட்டு சமநிலைப்படுத்தி அதன்மேல் கசகசா விதைகளை தூவி அதனை சிறிது சிறிதாக வெட்டி ஒரு பாத்திரத்தில் தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். இதுவே மிகவும் எளிமையாக செய்யக்கூடிய ஒரு உணவாகும்.
மேலும், பேரிச்சம்பழத்தில் இரும்புச்சத்து இருப்பதன் காரணமாக எலும்பு வலுவாக எப்பொழுதும் இருக்கும். அதனை தொடர்ந்து பேரிச்சம் பழம் மற்றும் பாதாம் ஆகிய அனைத்தும் கலந்து இருப்பதால் மூளைக்கு புத்துணர்ச்சி தரும். இதன் மூலமாக ஞாபக சக்தி அதிகமாகும். மேலும் ஏலக்காயில் வாசனை மட்டும் வராது.
ஏலக்காயை பொடியாக்கி நாம் சாப்பிடும் பொழுது அதில் உள்ள விதைகளில் இருக்கும் சத்துக்களும் உடலுக்குள் செல்லும். இதன் மூலமாக செரிமான பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து போகும். மேலும் திராட்சையில் பல நன்மைகள் உள்ளன. திராட்சை சாப்பிடுவதன் ரத்த சத்து அதிகரிக்கும். அதனைத் தொடர்ந்து இரத்த சோகையும் தீரும் .